அச்சு அசலாக சுஷாந்த் சிங் போலவே இருக்கும் இளைஞர்.. அவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. குஷியில் ரசிகர்கள்!

718

மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்திய திரையுலகையே ஒரு நிமிடம் புரட்டி போட்டது. அவரது தற்கொலைக்கு முக்கிய காரணமாக அமைந்தது வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் தான் என கூறப்படுகிறது.

இவரின் தற்கொலைக்கான முக்கிய காரணத்தை இன்று வரை சிபிஐ அலசி ஆராய்ந்துகொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில், சுஷாந்த் சிங் வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் படமாக உருவாக உள்ளது. அவரது கதாபாத்திரத்திரத்தில் நடிக்க சுஷாந்த் போலவே தோற்றம் கொண்ட டிக் டாக் பிரபலம் சச்சின் திவாரி ஒப்பந்தமாகியுள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

இந்தப்படத்திற்கு Suicide or Murder எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஷாமிக் மவுலிக் இயக்கவுள்ளார்.

பாலிவுட்டில் வாரிசு நடிகர்கள் விவகாரம் கிளம்பிய நிலையில் சுஷாந்த் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளவரை அவுட்சைடர் என்று பதிவு செய்துள்ளனர்.
படக்குழுவினர்.இந்தப்படத்திற்கும், ஒரு சிறு நகரத்தில் இருந்து பாலிவுட்டில் கால் பதிக்கும் சச்சின் திவாரிக்கும் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.