அண்ணியை கரெக்ட் செய்ய நினைத்த கொழுந்தன்… அண்ணனுக்கு தெரியவந்த விஷயம் : இறுதியில் நடந்த பயங்கரம்!!

5331

விழுப்புரம்..

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஜெயங்கொண்டான் சத்யா நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன்கள் மாரிமுத்து (35), வீரமுத்து (32). இவருக்குமே திருமணமாகி குழந்தைகள் உள்ளது.

இதில் வீரமுத்து லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு ஜெயங்கொண்டானில் இருந்து தனது வீட்டுக்கு வீரமுத்து நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் அவரை திடீரென வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வீரமுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த வீரமுத்துவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி வீரமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை தொடர்பாக செஞ்சி காவல் நிலையதத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. வீரமுத்து அவரது அண்ணன் மாரிமுத்து மனைவியை எப்படியாவது அடைய வேண்டும் என்று எண்ணி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த விவகாரத்தை அறிந்த அண்ணன் மாரிமுத்து ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

வீரமுத்து நேற்று இரவு ஜெயங்கொண்டானில் இருந்து தனது வீட்டுக்கு வந்துக்கொண்டிருந்த போது வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த வீரமுத்து உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வீரமுத்துவின் அண்ணன் மாரிமுத்துவை கைது செய்தனர். இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here