அந்த இடத்தில் இப்படியொரு டாட்டூ.. தனுஷ் பட நடிகையின் லேட்டஸ்ட் ஹாட் போஸ்!!

78

அனுபமா பரமேஸ்வரன்..

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் பிரேமம். குறைந்த பட்ஜெட்டில் உருவாகிய இப்படத்தில் நடித்த மூன்று நடிகைகளும் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாகினார்கள். குட்டி பள்ளி சிறுமியாக நடித்து பிரபலமானார் அனுபமா பரமேஸ்வரன்.

இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வந்த அனுபமா தமிழில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் அறிமுகமாகினார். அதன்பின் தள்ளி போகாதே படத்தில் நடித்திருந்தார். தற்போது சைரன் படத்தில் பிஸியாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அனுபமா கடந்த ஆண்டு வெளியான ரெளடி பாய்ஸ் படத்தில் கதாநாயகனுக்கு லிப்லாக் மற்றும் நெருக்கமான காட்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார். அதற்காக சுமார் 50 லட்சம் சம்பளமாகவும் பெற்றிருந்தார் அனுபமா. நடிகர் சித்து ஜொன்னலகட்டா நடிப்பில் டில்லு ஸ்கொயர் என்ற படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்.


அப்படத்தின் ஒரு பாடலில் அனுபமா, ரொமான்ஸ் காட்சியில் லிப்லாக் முத்தம் கொடுத்து அனைவரையும் முகம் சுளிக்க வைத்தார். மேலும் அவர் மடிமீது உட்கார்ந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படமும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி கொடுத்தது. தற்போது கழுத்துக்கு கீழ் இருக்கும் டாட்டூவை காமித்தபடி கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.