அமீரக லொட்டரியில் கோடீஸ்வரரான கேரள இளைஞன் : பரிசுத்தொகையை பார்த்து தலைசுற்றிய தருணம்!!

370

லொட்டரியில்….

இந்திய மாநிலம் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜூ (39) கடந்த 11 ஆண்டுகளாக அமீரகத்தில் வேலை செய்து வருகிறார். துபாய் அருகே எண்ணெய் நிறுவனம் ஒன்றில் கன்ட்ரோல் ரூம் ஆபரேட்டராக ஸ்ரீஜூ இருந்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவருக்கு நீண்ட நாள்களாவே சொந்த ஊரில் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

இந்த சமயத்தில் தான் நேற்று முன் தினம் லொட்டரி ஒன்றில் பரிசு விழுந்திருக்கும் செய்தி ஸ்ரீஜூவுக்கு கிடைத்தது. பின்னர், தான் வாங்கிய 154 -வது மஹ்சூஸ் லொட்டரி குலுக்கலின் இணையதளத்தில் தனது லொட்டரி எண்ணை சரிபார்த்த போது தான் ஸ்ரீஜூ நம்பினார்.


முக்கியமாக பரிசுத்தொகையை பார்த்த ஸ்ரீஜூ ஆடிப்போனார். இந்திய மதிப்பில் ஸ்ரீஜூ வென்ற பரிசுத்தொகை ரூ.45 கோடி ஆகும். இதனையடுத்து, லொட்டரி நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வந்தவுடன் தான் ஸ்ரீஜூ முழுவதுமாக நம்பினார். இதுவரை அமீரகத்தில் பட்ட சிரமங்களுக்கெல்லாம் முடிவு வந்துவிட்டதாக மகிழ்ச்சியில் உள்ளார்.

மேலும், சொந்த ஊரில் வீடு கட்டலாம் என்பதை தாண்டி இதை வைத்து என்ன செய்வதென யோசிக்க முடியவில்லை என ஸ்ரீஜூ குழப்பத்தில் உள்ளார்.