ஆசிரியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து எரித்த இளைஞர்… பகீர் வாக்குமூலம்!!

352

கர்நாடகாவில்..

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாணிக்யனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் தீபிகா.28 வயதாகும் இவர் மேலக்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் ரீல்ஸ் செய்வதிலும் பிரபலமானவர். இவருடைய கணவர் லோகேஷ். இவர்களுடைய மகன் 8 வயது லோகேஷ். ஜனவரி 20ம் தேதி வழக்கம் போல் பணிக்கு சென்ற தீபிகா நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

அவருடைய செல்போனை தொடர்பு கொண்ட போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடிவந்தனர். காணாமல் போன தீபிகாவின் வாகனம் மேலக்கோட்டில் உள்ள யோக நரசிம்ம சுவாமி கோவில் வாசலில் நிற்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணையில் அங்கே எரிந்த நிலையில் சடலம் ஒன்றை கைப்பற்றினர். இறுதியில் அது மாயமான ஆசிரியை தீபிகாவின் சடலம் என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கொடூரமாக கல்லால் தாக்கி கொலை செய்து உடலை எரித்தது விசாரணையில் தெரியவந்தது. கடந்த 2 ஆண்டுகளாக நித்தேஷ் கவுடா என்ற 22 வயது இளைஞருடன் பழகி வந்தார்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தீபிகாவுடன் ரீல்ஸ் தயாரிப்பு பணியில் நித்தேஷ் கவுடா உடன் இருந்தார். தீபிகாவுடன் நெருங்கிப் பழகிய சூழ்நிலையில் நாளுக்கு நாள் இவரின் போக்கு சரியில்லாததால் தீபிகா இவருடன் பேசுவதை தவிர்த்துள்ளார். இந்நிலையில் நித்தேஷ் தனது பிறந்த நாளைக் கொண்டாட தீபிகாவை, மேலக்கோட்டில் உள்ள யோக நரசிம்ம சுவாமி கோவிலுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

கோவிலில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் தீபிகாவின் சுடிதார் சால் மூலம் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பயத்தில் உடலை எரித்து மலையடிவாரத்தில் புதைத்துள்ளார்.

பாதி எரிந்த தீபிகாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த அறிக்கைக்கு பிறகே தீபிகா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் என்கின்றனர் காவல்துறையினர்.