ஆறு மனைவிகளுடன் படுக்கை பகிர்ந்து கொள்வதற்காக 20 அடி கட்டிலை அமைத்த நபர்!!

1662

பிரேசிலில்..

ஆறு மனைவிகளுடன் ஒன்றாக படுக்கை பகிர்ந்து கொள்வதற்காக சுமார் 80 ஆயிரம் யூரோக்கள் செலவில் 20 அடி நீளம் உள்ள கட்டிலை அமைத்து தன்னுடைய ஆசையை நிறைவேற்றியுள்ளார் பிரேசில் நாட்டவர்.

பிரேசில் நாட்டு சாவோ பாலைவனப் பகுதியை சேர்ந்தவர் ஆர்தர் ஓ உர்சோ ( வயது-37) இவர் 6 பெண்களை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இவர் சமீபத்தில் 51 வயதான ஒலிண்டா மரியா என்ற பெண்ணையும் மணந்துள்ளார். இந்த நிலையில் இதற்கு முன்னதாக லுவானா கசாகி (வயது- 27), எமிலி சோசா (வயது-21), வால்கேரியா சாண்டோஸ் (வயது-24), டாமியானா (வயது-23), மற்றும் அமண்டா அல்புகெர்கி (வயது-28) ஆகியோரை திருமணம் செய்து இருந்தார்.

ஒவ்வொரு மனைவியும் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க விரும்புவதாக ஆர்தர் தெரிவித்துள்ளார். 6 மனைவிகளுடன் ஒன்றாக படுக்கையை பகிர்ந்து கொண்டு இன்பம் அடைய முடியவில்லை என்பது அவருக்கு மிகப்பெரிய கவலை. முன்பு கட்டில் சிறியதாக இருந்ததால் அதில் 3 பேருக்கு மேல் படுக்க முடியவில்லை. இந்த படுக்கையைப் பற்றிய தகவலை வழங்கிய ஆர்தர்,

இதை தயாரிக்க 12 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கட்டில் உடையாதவாறு சுமார் 950 திருகு ஆணிகள் கட்டிலில் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வளவு பேர் தூங்குவதால் கட்டில் பழுதடையக்கூடாது என்பதை மனதில் வைத்து கட்டில் தயார் செய்யப்பட்டுள்ளதாக ஆர்தர் மேலும் தெரிவித்துள்ளார்.

பழைய படுக்கையின் சிறியதாக இருந்ததால் எனது மனைவிகளில் ஒருவர் சோபாவில் மாறி மாறி தூங்க வேண்டியிருந்தது, ஆனால் புதிய படுக்கை மூலம் இந்த பிரச்சனை முடிக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆர்தர் என் வாழ்வில் அங்கம் வகிக்கும் பெண்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர் என தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஆர்தர் மற்றும் அவரது முதல் மனைவி லுவானா 2021 இல் திருமணம் செய்து கொள்ணடார். கத்தோலிக்க திருச்சபையில் மற்ற பெண்களுடன் திருமணம் சட்டப்பூர்வமாக்கப்பட்டது. இருப்பினும், நாட்டில் பலதார மணம் சட்டவிரோதமானது என்பதால் இதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை. ஆர்தருக்கு ஒன்பது மனைவிகள் இருந்தனர், ஆனால் கடந்த ஆண்டு மூவரை விவாகரத்து செய்து விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here