இத்தாலியில் உள்ள இலங்கையர்களுக்கு நற்செய்தி!!

698

இத்தாலிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட விசேட பொது மன்னிப்பின் கீழ் அந்த நாட்டில் வசிக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களின் விசா புதுப்பித்தல் பணிக்கு ரோமில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் மிலானில் உள்ள துணைத் தூதரகம் ஆகியன ஒத்துழைப்பு வழங்குகின்றன.

சென்டோரியா – 2020 விசாவிற்காக இத்தாலிய அரசாங்கத்தால் ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்றின் பின்னர் இத்தாலியை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு அமைய இவ்வாறு வேலை வாய்ப்பு நுழைவு விசாவை உரிய முறையில் விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் கீழ் இலங்கையர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் என ரோமில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கை தூதரகம் அல்லது துணை தூதரகத்தில் தமது விணப்பங்களை முன்வைக்க வேண்டும் என்பதுடன் 10 நாட்களுக்குள் தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டுக்களின் பிரதிகளை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட பொது மன்னிப்பின் கீழ் தமது கடவுச்சீட்டுக்களை புதுப்பித்து கொள்வதற்காக இந்த மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் தூதரகத்தில் தமது கடவுச்சீட்டினை ஒப்படைக்க வேண்டும் என ரோமில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here