இன்னும் பத்தாண்டுகள்… கொரோனா பெருந்தொற்று தொடர்பில் ஜேர்மன் நிபுணர் அதிர்ச்சி தகவல்!!

805

மனிதகுலம் கொரோனா பெருந்தொற்றில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி பெற ஒரு தசாப்தம் ஆகலாம் என ஜேர்மன் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி 2020 இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கிடைக்கும் என்று ஜேர்மன் நோயெதிர்ப்பு நிபுணர் உகுர் சாஹின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சாஹின் ஜேர்மனியின் மெயின்ஸ் பகுதியில் அமைந்துள்ள பயோன்டெக் என்ற பயோடெக்னாலஜி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

கொரோனா தடுப்பூசி குறித்து தற்போது ஆராய்ச்சி மேற்கொண்டுவரும் உலகெங்கிலும் உள்ள 17 நிறுவனங்களில் பயோன்டெக் ஒன்று.

2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முதல் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என சாஹின் கருதினாலும், கொரோனா பெருந்தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு இன்னும் நீண்ட காலம் தேவைப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முதலில், உருவாக்கப்படும் தடுப்பூசியானது விரிவான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். தற்போதைய தகவலின்படி உலகெங்கும் 13 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இதனால் மனிதகுலம் தேவையான நோயெதிர்ப்பு சக்தியை அடைவதற்கு சுமார் 10 ஆண்டுகள் வரை ஆகலாம் என்கிறார் சாஹின்.

மேலும், தொற்று அல்லது தடுப்பூசி மூலம் உலக மக்கள்தொகையில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் நோயெதிர்ப்பு சக்தியுடன் இருந்தால் மட்டுமே கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியை அடைய முடியும் என்று நான் கருதுகிறேன் என குறிப்பிட்டுள்ளார் சாஹின்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here