இன்றைய ராசிபலன் (06.05.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

1436

இன்றைய ராசிபலன்..

மேஷம்

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்கள் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பகைவர்களும் நண்பர்களாக மாறுவார்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

ரிஷபம்

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புது அனுபவங்கள் உண்டாக கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதியவர்களின் அறிமுகம் முன்னேற்றத்தை கொடுக்கும் வகையில் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆரோக்கியம் மேம்படும்.

மிதுனம்

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புது தெம்பு பிறக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. இதுவரை இருந்து வந்த மந்த நிலை மாறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்க வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நேர்மையுடன் இருப்பது நல்லது. குறுக்கு வழி ஆபத்தை தரும்.

கடகம்

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புத்துணர்ச்சி நிறைந்த நல்ல நாளாக அமையப் போகிறது. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளால் மற்றவர்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இழப்புகள் ஏற்படலாம் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கூடுதல் பொறுப்பை ஏற்க வேண்டி இருக்கும்.

சிம்மம்

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எழுச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. சமூக சிந்தனை அதிகரித்து காணப்படும். முன் பின் தெரியாதவர்கள் இடமிருந்து எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முன் கோபத்தை குறைப்பது நல்லது.

கன்னி

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகள் வீண் போகாமல் நினைத்தது நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அரசு வழி காரியங்களில் அனுகூல பலன் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் அடுத்தவர்களின் பேச்சைக் கேட்காமல் முடிவெடுங்கள்.

துலாம்

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிந்திக்க கூடிய நல்ல அமைப்பாக அமைய இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய பலன்கள் காணப்படுகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு, இதனால் டென்ஷனுடன் காணப்படுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களை சுற்றி இருப்பவர்களை இனம் கண்டு கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கப் போகிறது. அவசர முடிவுகள் இழப்புகளை ஏற்படுத்தும் கவனம் வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வருமானம் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எடுத்தோம் கவிதை என்று எதையும் செய்யாதீர்கள்.

தனுசு

தனசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை பேசி பெரிதாக்காதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இடம் மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பயணங்களின் மூலம் அனுகூல பலன் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பரந்த மனப்பான்மை இருக்கும்.

மகரம்

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்கள் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொலைதூர இடங்களில் இருந்து சுப செய்திகள் வரும். மனதிற்கு பிடித்தவர்களிடம் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்கள் துறை சார் நிபுணர்களை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.

கும்பம்

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. போக்குவரத்து தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். குடும்ப ஒற்றுமைக்கு மனம் விட்டு பேசுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் அதிக லாபம் காண கூடுதல் உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சமரச பேச்சுவார்த்தையில் அனுகூல பலன் உண்டாகும்.

மீனம்

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முயற்சிகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தடைகளை கொடுக்கும் விமர்சனங்களை தகர்த்து எறியுங்கள். சுய சிந்தனை சுயலாபத்தை கொடுக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உழைப்பு மூலதனம் ஆகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here