இன்றைய ராசிபலன் (07.05.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

1163

இன்றைய ராசிபலன்..

மேஷம்

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் துடிப்புடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதுவும் சுலபமாக கிடைக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் வரலாம் கவனம் வேண்டும்.

ரிஷபம்

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மற்றவர்கள் வேலையையும் சேர்த்து செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கக்கூடும். கணவன் மனைவியிடையே நடக்கும் பிரச்சனைகள் தொடராமல் பார்த்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை கூடும்.

மிதுனம்

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள் வலுவாகாமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் கவனம் வேண்டும்.

கடகம்

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கப் போகிறது. எதிர்மறையான விமர்சனங்களை கண்டு கொள்ளாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வழக்கு சார்ந்த விஷயத்தில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடும்.

சிம்மம்

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் துணிச்சல் மிகுந்த செயல்களை செய்யக்கூடிய நாளாக இருக்கிறது. தேவையற்ற பகைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக்கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் பெருகும்.

கன்னி

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய முக்கிய முடிவுகளை தாமதப்படுத்துவது நல்லது. சுப காரிய முயற்சிகளில் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கு உரிய பலன்கள் கிடைக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மற்றவர்களுடைய கருத்துகளுக்கும் முன்னுரிமை கொடுப்பது நல்லது.

துலாம்

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே புதிய புரிதல் ஏற்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். தகுந்த சமயத்தில் நண்பர்களின் உதவிக்கரம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பொறுமையுடன் இருப்பது நல்லது.

விருச்சிகம்

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடிவரும் யோகம் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு அசையும் சொத்துக்கள் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி கிடைக்கும்.

தனுசு

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்களில் தோல்வி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே பொறுமையை கையாளுவது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் எடுத்தோம் கவிழ்த்தாம் என்று எதையும் செய்யாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கடன் வாங்காதீர்கள்.

மகரம்

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மந்த நிலையுடன் காணப்படாததற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் தோன்றி பின்னர் மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நண்பர்களுடைய ஆதரவு கிடைப்பதில் இருந்து வந்த இடையூறுகள் நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவு தேவை.

கும்பம்

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சியுடன் காணக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. நினைத்ததை சாதித்து காட்டக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் எதையும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் பொறுமையை கையாளுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு.

மீனம்

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமை அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பயணங்கள் மூலம் அதிர்ஷ்டம் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பேசும் வார்த்தையில் கவனமுடன் இருப்பது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here