இன்றைய ராசிபலன் (10-07-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

919

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபார ரீதியாக பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும் எனவே எச்சரிக்கை தேவை. உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். ஆடம்பரத்தை குறைப்பது நல்லது. கடன் பிரச்சினை தீரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். சுபகாரிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும்.


மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் தடைகள் உண்டாகலாம். நண்பர்களுடன் சிறு மனக்கசப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகளால் மன கஷ்டம் ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். தொழில் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். நிம்மதி இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். உங்களால் முடிந்த தரும காரியங்கள் செய்து நிம்மதி அடைவீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளித்தாலும் செலவுகள் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சிக்கனமாக செயல்படுவது நல்லது. இதுவரை வராத பழைய கடன்கள் வசூலாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் குறையும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிட்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பணவரவு தாரளமாக இருக்கும். புதிய பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். தேவையில்லாத அலைச்சல்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் செய்யும் செயல்களில் கவனம் தேவை. ஆரோக்கிய ரீதியாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு தேவையில்லாத டென்ஷன் ஆரோக்கிய குறைவு ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். வியாபார ரீதியான பயணங்களில் அலைச்சல் உண்டாகும். எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.