இன்றைய ராசிபலன் (11.01.2024) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

581

இன்றைய ராசிபலன்…

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று கெட்ட விஷயத்தில் இருந்து விலகி இருப்பீர்கள். உங்களுக்கே தெரியாமல் தான் இந்த விஷயம் நடக்கும். நீங்கள் அறியாமலேயே கடவுள் உங்களுக்கு நிறைய நல்லதை செய்ய போகின்றான். ஆகவே இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து வாருங்கள். அடுத்தவர்களை ஏமாற்றாதீர்கள். உங்களுக்கு பிரச்சனையே வந்தாலும் சரி, உண்மையை சொல்லுவது, உங்களுக்கான நல்லதே நடத்தி தரும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பக்குவமான நாளாக இருக்கும். பெரிய அளவில் பிரச்சனை வந்தாலும், அதை சுலபமாக எப்படி தீர்ப்பது என்ற ஞானத்தை இறைவன் உங்களுக்கு கொடுத்திருப்பான். பெரிய யோகிகள் போல நடந்து கொள்வீர்கள். இதனால் நன்மைக்கு மேல் நன்மை வந்து உங்களை அடையப் போகின்றது. காட்டுமிராண்டித்தனமாக இருந்தவன் எப்படி இவ்வளவு பக்குவமாக பேசுகின்றானே, என்று உங்களுக்கு தெரிந்தவர்களே, உங்களுக்கு பின்னால் முணுமுணுப்பார்கள் பாருங்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இன்று டென்ஷனோடு இருக்கக்கூடாது. உங்களை வெறுப்பேத்தி பார்க்கவே நாலு பேர் உங்களை சுற்றி இருக்காங்க. எதிரிகள் முன்பு தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்றால் டேக் இட் ஈசி பாலிஸி என்பதை இன்று நீங்கள் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். எதிரிகளுக்கு பஞ்ச் கொடுக்கும் வகையில் நீங்களும் உங்களுடைய குடும்பத்தோடு சேர்ந்து சந்தோஷமாக இருங்கள். எதிரிகளுக்கு வாயில் அவல் போட்டு அதை மென்று தின்று, பேசும் அளவுக்கு உங்கள் வாழ்க்கை மோசமாக போகக்கூடாது. அதற்கு நீங்கள் தான் உஷாரா இருக்கணும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று புது வரவு நிறைந்த நாளாக இருக்கும். சில பேருக்கு பொங்கலுக்கு தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. சில பேருக்கு புது உறவுகள் கூட இன்று கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. காதல் கைகூடும். திருமணத்தில் முடியும். சொந்த பந்தங்களுக்கு இடையே வந்த பிரச்சனைகள் சரியாகி எல்லா விஷயங்களுக்கும் இன்று சுபம் போட்டு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். கூடுமானவரை இன்று நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ள வேண்டாம். கூட்ட நெரிசலான இடத்திற்கு போக வேண்டாம். வயதானவர்கள் இன்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மற்றபடி மாணவர்கள் வேலை செய்பவர்கள் இவர்கள் எல்லாம் தங்களுடைய வேலையை பொறுப்போடு பார்த்தால் போதும். பிரச்சனைகள் இருக்காது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உழைப்பு அதிகமாக இருக்கும். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நிறைய வேலை இருக்கும். வேலையை முடிப்பதற்குள் உடல் அசதி ஏற்படும். நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்க. வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளோடு அனுசரணையுடன் இருக்க வேண்டும். நிதானத்தை இழந்தால் இன்று பிரச்சனை உண்டாகும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் உஷாராக இருக்க வேண்டும். உங்கள் மீது வீண் பழி விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அனாவசியமாக அடுத்தவர்கள் பிரச்சனையில் மூக்கை நுழைக்க வேண்டாம். அடுத்தவர்கள் பாவம் என்று சொல்லி சாட்சி சொல்ல போகாதீங்க. இன்று நீங்கள் பாவம் பார்த்தால் அந்த பாவம் பிறகு உங்களை வந்து தொற்றிக் கொள்ளும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் மட்டும் போதும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். விற்காத பொருட்களை விற்பதற்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத வெற்றி காண்பீர்கள். என்றோ செய்த முதலீடு என்று லாபத்தை கொடுத்திருக்கும். மனமகிழ்ச்சி அடைவீர்கள். குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று சந்தோஷமாக நேரத்தை செலவழிப்பீர்கள். பொழுதுபோக்கு கேளிக்கைகளில் என்று ஆர்வம் ஏற்படும். இதனால் கையில் இருக்கும் பணம் கொஞ்சம் செலவாகும். தெரியாத எதிர்பாளின நட்பு கூடாது. மூன்றாவது நபரை நம்பி எந்த ஒரு வேலையையும் செய்யாதீங்க. உங்களுடைய ரொம்பவும் அந்தரங்கமான விஷயங்களை வெளிப்படையாக பேசாதீங்க. பிறகு சிக்கலாகிவிடும். வியாபாரத்தில் முதலீடு செய்யும்போது கவனம் இருக்கட்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று ரொம்ப ரொம்ப கவலையாக இருக்கப் போகிறீர்கள். எதையோ இழந்தது போல முகம் இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்காது. வரக்கூடிய பண்டிகை நாட்களைக் கூட கொண்டாடுவதற்கு தேவையான ஆர்வம் இருக்காது. ஆனால் எல்லா சந்தோஷத்தையும் வர வைக்கணும். கவலைகளை துறக்கணும். நமக்காக இல்லை என்றாலும், நம் மனைவி பிள்ளைகளுக்காக சந்தோஷத்தை வெளி கட்டுவது நன்மையை தரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விதத்திலும் முதல் மரியாதை கிடைக்கும். உங்களுக்கு எல்லோரும் கிரீடம் சூட்டும் அளவுக்கு பாராட்டு மழையை பொழிவார்கள். நீங்கள் இன்று வெற்றிக்கான அடையாள சின்னமாக நிற்பீர்கள். இதனால் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கப் போகின்றது. ஆனாலும் உங்களுக்கு தலைகனம் அதிகமாகக் கூடாது. சக ஊழியர்களுடன் சகஜமாக பழகுவது பெரிய மனுஷன் தனம் என்பதை மறந்துடாதீங்க.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் வரக்கூடாது. ஆன்மீகத்தில் மனது ஈடுபட வேண்டும். வீம்புக்காக சாஸ்திர சம்பிரதாயங்களை மாற்றி விடாதீர்கள். இன்று நீங்கள் செய்த தவறுக்கு என்னைக்கும் மன்னிப்பு கிடைக்காது. ஈகோவை விட்டு விடுங்கள். சண்டை சச்சரவுகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். குறிப்பாக வாழ்க்கை துணையிடம் எதிர்த்து போட்டியிட வேண்டாம். அது உங்களுக்கு தோல்வியையும், மன சஞ்சலத்தையும் தான் கொடுக்கும்.