இன்றைய ராசிபலன் (13.01.2024) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

197

இன்றைய ராசிபலன்…

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகள் வரும். ஆனால் அதை சமாளிக்க கூடிய தன்னம்பிக்கையும் தைரியமும் உங்களிடத்தில் இருக்கும். நம்பிக்கையை ஒருபோதும் நீங்கள் தளர விட மாட்டீர்கள். இந்த விடாப்பிடியான பிடிவாதம் தான் உங்களை வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்கும். தைரியமாக முடிவெடுங்கள். தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள். யாரிடமும் தலைகுனிந்து நிற்காதீர்கள். இன்று மகுடம் சூட்டப்படுவது உங்களுக்கே.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாள் ஆக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் உங்கள் கட்டுப்பாட்டை இழக்க மாட்டீர்கள். எந்த இடத்தில் எதை பேசணும், எந்த இடத்தில் எதை பேசக்கூடாது என்று, உஷாராக நடந்து கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். உறவுகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். சுப செலவு உண்டு. பொங்கலுக்கு தேவையான ஆடை ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்ப்பு எல்லாம் நிறைவேறும் நாளாக அமையும். மனமகிழ்ச்சி இரட்டிப்பாகும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத வரவு சந்தோஷத்தை கொடுக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். பொங்கல் கொண்டாட தேவையான எல்லா வேலைகளையும் செய்ய தொடங்கி விடுவீர்கள். உங்களுடைய வீட்டில் பொங்கல் விழா கலை கட்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாக இருக்கும். அடுத்தவர்களை நம்பித்தான் வாழ வேண்டும் என்ற நிலை மாறி, உங்களால் தனியாகவும் வாழ முடியும் என்று சாதித்து காட்டுவீர்கள். குறிப்பாக இன்று பெண்களுக்கு மனமகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். குட்ட குட்ட குனிந்து இருந்தது போதும் என்று பொங்கி எழு கூடிய பெண்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தோல்விகள் வரும். ஆனால் தோல்விகளை கண்டு துவண்டு போய் உட்கார கூடாது. எப்படியாவது வாழ்க்கையில் ஜெயித்து விட வேண்டும் என்ற வெறி உங்களுக்குள் இருக்க வேண்டும். அப்போது தோல்விகளும் உங்களை கண்டு துவண்டு போகும். இன்று எதிரிகளை கண்டு பயப்படாதீங்க. யாராவது வந்து, உங்களால் இந்த விஷயம் செய்ய முடியாது என்று சொல்லி, உங்கள் தகுதியை குறைத்தால், உங்கள் தன்னம்பிக்கையை குறைத்தால் அதற்கு நீங்கள் செவிசாய்க்க கூடாது. அதிலிருந்து மீண்டு வருவதற்கு விடாமுயற்சியை மேற்கொள்ளவும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய அனுபவங்கள் கிடைக்கும். வாழ்க்கை என்றால் என்ன என்பதை கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்களை உங்களுக்கு எதிரிகள் சொல்லித் தரப் போகிறார்கள். கவலையே படக்கூடாது. எந்த இடத்தில் அவமானப்பட்டாலும் சரி அந்த அவமானத்தை ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டு அடுத்த வேலையை பார்க்க செல்லுங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருங்கள். நண்பர் தானே என்று சொல்லி அவரிடம் எந்த ரகசியத்தையும் உளறி வைக்காதீங்க.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். இதுவரை எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். செய்யும் தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். புதிய காண்ட்ராக்ட் ஒப்பந்தம் கையெழுத்தாகும். எதிர்காலத்துக்கு தேவையான நிறைய நல்லது நடக்கக்கூடிய நாள் இது. சந்தோஷம் நிறைந்த இந்த நாளை குடும்பம் குழந்தையோடு சேர்ந்து கொண்டாடி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று விருப்பங்கள் நிறைவேறக்கூடிய நாளாக அமையும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளில் இருந்த பின்னடைப்பு இன்று ஒரு முடிவுக்கு வந்துவிடும். வரக்கூடிய பொங்கல் சந்தோஷமாக கொண்டாட சுப செலவுகள் செய்வீர்கள். குழந்தைகளுக்கு மனைவிக்கு பிடித்த பொருட்களை வாங்கி பரிசளிப்பீர்கள். சில பேருக்கு விடுமுறை தொடங்கியிருக்கும். சொந்த ஊருக்கு செல்லக்கூடிய வேலையை பார்ப்பீங்க மனசு நிறைவாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று கவலைகள் மறந்து நடக்க வேண்டும். நடந்த பழைசையே நினைத்து மனம் கஷ்டப்படக் கூடாது. இன்று என்ன வேலை. அதில் அக்கறை காட்டுங்கள். நேற்றைய தினம் முடிந்து போய்விட்டது. ஆகவே அதை பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. வேலைகளை எல்லாம் சுறுசுறுப்பாக முடித்தால் தான் பண்டிகை நாட்களில் நிம்மதி கிடைக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைக்கவும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று சிக்கல் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய பிரச்சனையை யாருமே புரிந்து கொள்ள மாட்டார்கள். கணவன் மனைவிக்கிடையே சிக்கல் வரவும் வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கவலைப்படாதீங்க புத்திசாலித்தனமாக செயல்பட்டால் எல்லா பிரச்சனைகளும் சரியாகிவிடும். இன்று வேகத்தை விட விவேகம் தான் உங்களுக்கு முக்கியம். சில தந்திர வேலைகளை செய்யலாம். தேவைக்கு ஏற்ப அப்பப்போ சின்ன சின்ன பொய்யும் சொல்லலாம் தவறு கிடையாது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று செலவு நிறைந்த நாளாக இருக்கும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க முடிவு செய்து விடுவீர்கள். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்வீர்கள். உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உங்கள் வீட்டு பெரியவர்களுடைய தேவை என்ன என்பதை கேட்பது ரொம்ப ரொம்ப அவசியம். அடுத்தவர்களுடைய உணர்வுக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுங்க. உறவுகளுக்குள் சின்ன சின்ன சண்டைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதை.

மீனம்

மீன ராசிக்காரர்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். எந்த விஷயத்திலும் தலைகனத்தோடு நடக்கக்கூடாது. பொங்கல் செலவுக்கு தேவையான பணம் கையில் இருக்கும். இருந்தாலும் சந்தோஷமாக இருக்க முடியாத சூழ்நிலை சில பேருக்கு இருக்கும். அதற்கு காரணம் உங்களுடைய தலைகணம்தான். ஈகோவை நகர்த்தி வையுங்கள். சந்தோஷம் உங்கள் பக்கம் வந்து விடும்.