இன்றைய ராசிபலன் (18.09.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

802

இன்றைய ராசிபலன்…

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் உடல் நலம் சிறப்பாக இருக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையால் பாராட்டு பெறுவீர்கள். தாராளமான பொருள் வரவு இருக்கும்.

ரிஷபம்:

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் பொருளாதார வளர்ச்சி கூடும். உங்களின் எண்ணங்கள் சிறக்கும். தொழில், வியாபாரங்களில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்துடன் கோயிலுக்கு செல்வீர்கள்.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்களில் திருப்தி ஏற்படும்.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்கள் இன்றைய தினம் எதிலும் கவனமாக செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் பணி சுமை கூடும். நண்பர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சராசரியான பொருள் வரவு இருக்கும். வாழ்க்கைத் துணையிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரங்களில் இருந்த போட்டிகள் அகலும். பிரிந்து சென்றவர்கள் உங்களைத் தேடி வருவார்கள். தந்தை வழி உறவுகளால் நன்மை ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்படும். பெண்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். நீண்ட நாள் வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த பொருள் வரவு இருக்கும்.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் மணக்குழப்பம் ஏற்படும். வாகனங்கள் வழியில் செலவுகள் ஏற்படும். ஒரு சிலர் கடன் வாங்க நேரிடும். பெண்களால் பிரச்சனைகள் ஏற்படலாம். நண்பர்கள் பக்க பலமாக இருப்பார்கள். திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் எண்ணங்கள் பலதமாகும். தொழில், வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசாங்க ரீதியான உதவிகள் கிடைக்கும். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் ஆதாயம் இருக்கும். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். உடலும், மனமும் உற்சாகமாக இருக்கும். உத்தியோகங்களில் மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சிலர் புதிய வீடு, நிலம் போன்ற சொத்து வாங்கும் யோகம் பெறுவார்கள்.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் சிந்தனை தெளிவாகும். எதிர்காலத்திற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். திடீர் செலவுகளை சமாளிப்பீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். ஒரு சிலருக்கு மருத்துவ செலவு ஏற்பட்டு நீங்கும்.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் எதிர்பாராத விரயங்கள் ஏற்படும். தொழில் வியாபாரங்களில் புதுமைகளை புகுத்தி வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கோர்ட் விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும்.

மீனம்:

மீன ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் சிலருக்கு உடலிலும், மனதிலும் சோம்பல் கூடும். புதிய காரியங்களில் ஈடுபட வேண்டாம். வார்த்தைகளில் கவனம் தேவை. கொடுத்த கடன் வசூல் ஆவதில் தாமதம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தடங்கள் உண்டாகும்.