இன்றைய ராசிபலன் (21.01.2024) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

442

இன்றைய ராசிபலன்…

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் கொஞ்சம் பொறுமை தேவை. அவசரப்பட்டு எந்த வேலையையும் செய்யக்கூடாது. அடுத்தவர்கள் உங்களை உசுப்பேத்தி விட்டு வேலையை பார்ப்பார்கள். அப்போதும் உங்களுடைய மனது உறுதியாக இருக்க வேண்டும். கேட்பார் பேச்சை கேட்டு ஆடினால் இன்று உங்கள் வாழ்க்கை கேளியும் கிண்டலுமாய் மாற வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க. சுய புத்தியோடு செயல்படுபவர்கள் மட்டும்தான் இன்று வெற்றி அடைய முடியும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று முழு ஓய்வு கிடைக்கக்கூடிய நாளாக அமையப் போகின்றது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் பெரிய அளவில் பிரச்சனைகள் இருக்காது. நல்ல சாப்பாடு இருக்கும். உறவுகளோடு சேர்ந்து நேரத்தை கழிக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சுப செலவுகள் உண்டாகும். குடும்பத்தோடு இன்று மாலை பொழுது போக்காக வெளியிடங்களுக்கு செல்வீர்கள். மனது மகிழ்ச்சி அடையும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய வாழ்க்கைத் துணைக்கு பணிந்து நடக்க வேண்டும். குறிப்பாக கணவன்மார்கள் மனைவிமார்களை எதிர்த்து பேசாமல் இருப்பது நல்லது. இன்று விடுமுறை நாள். வீட்டில் சந்தோஷமாக ஓய்வு எடுக்க வேண்டும் என்றால் கொஞ்சம் நைசாக மனைவியை புகழ்ந்து பேசுங்கள். தவறு ஒன்றும் கிடையாது. குறை சொல்லிக் கொண்டே இருந்தால் பிரச்சனை உங்களுக்கு தான் பாத்துக்கோங்க.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனசோர்வு நிறைந்த நாளாக இருக்கும். எல்லா வேலையும் செய்ய வேண்டும் என்று மூளை சொல்லும். ஆனால் உடம்பு ஒத்துழைக்காது. உடல் அசதி காரணமாக எல்லா வேலையும் பின்தங்கி விடும். கவலைப்படாதீங்க ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேலைகளுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்கள். தொழிலில் கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். முன்பின் தெரியாத வேலையை செய்யக்கூடாது. முன்பின் தெரியாத நபரை நம்பக் கூடாது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நிதிநிலைமை சீராக இருக்கும். எதிர்பார்த்த வருமானம் கையை வந்து சேரும். எதாவது ஒரு நல்ல விஷயத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவீர்கள். இன்று முதலீடு செய்வது நன்மை தரக்கூடிய விஷயமாக இருந்தாலும் ஒன்றுக்கு இரண்டு முறை முக்கியமான விஷயங்களை யோசிக்கவும். தெரியாத விஷயங்களில் காலை எடுத்து வைக்க வேண்டாம். அனுபவ சாலிகள் சொல்வதைக் கேளுங்கள். உங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தை செய்தால் பிரச்சனை இருக்காது.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று போட்டிகளையும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் சுலபமாக செய்து முடிக்க முடியாது. இதனால் சில பேருக்கு டென்ஷன் அதிகரிக்கும்‌. ஆனால் கோபப்படுவதன் மூலம் எந்த நல்லதும் நடக்காது. இன்று உங்களுடைய பிரச்சனைகள் தீர வேண்டும் என்றால் நீங்கள் அமைதி காக்கவும். முழு சந்தோஷத்தையும் வெளிப்படையாக அடுத்தவர்களிடம் சொல்லாதீங்க. எதிரிகள் உங்கள் மீது கண் வைக்க நிறையவே வாய்ப்புகள் உள்ளது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அதிரபுதியான நாளாக இருக்கும். வீட்டை சுத்தம் செய்யக்கூடிய வேலையில் பெண்கள் ஈடுபடுவீர்கள். காலையிலேயே சமைத்து முடித்துவிட்டு உங்களுடைய அன்றாட வேலையை முடித்து விடுவீர்கள். சுறுசுறுப்பாக இன்றைய நாள் உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியோடு செல்லும். இன்றைய நாள் இறுதியில் எதையோ சாதித்தது போல மனம் சொல்லும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று விடுமுறை நாளாகவே இருந்தாலும் சில அலுவலக வேலைகளின் மூலம் பிக்கள் பிடுங்கள் இருக்கும். சில விஷயங்களை கட்டாயம் இன்று செய்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை. இதனால் குடும்பத்துடன் நேரம் செலவு செய்ய முடியாது. ஆனாலும் அக்கறையோடு அலுவலகப் பணியை முடித்து பாராட்டையும் பெறுவீர்கள். இன்று மாலை உங்களுக்கு நல்லது நடக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சாதகமான பலன்கள் உண்டு. மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். இன்று மாலை குடும்பத்தோடு பிரபல்யமாக ஏதாவது ஒரு கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரிய பேச்சுக்கள் நடக்கும். சுப செலவுகள் உண்டாகும். புதுசாக ஏதாவது பொருள் வாங்க வேண்டும் என்றால் இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். கூடுமானவரை நீண்ட தூர பயணத்தை நாளை தள்ளிப் போடவும். இன்று ஓய்வு எடுக்கவும். ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடுங்கள். அளவோடு சாப்பிடுங்கள். உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் எடையை குறைப்பதற்கு தேவையான முயற்சிகளை எடுக்கவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். பொருளாதாரத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரிவுகள் கஷ்டத்தை கொடுக்கும். உங்களுடைய மனசுக்கு பிடித்தவர்களை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய சில சூழ்நிலைகள் உண்டாகும். இதனால் அவர்களுடைய அருமை பெருமைகளை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். இனிமேல் உறவுகளை உயர்த்தி தான் பேசுவீர்கள். அந்த அளவுக்கு அனுபவங்கள் கிடைக்கும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய திறமையை காண்பிக்கும் போது கூட சின்ன அடக்கம் தேவை.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நல்ல ஓய்வு இருக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பு வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்கும். மன நிறைவாக இன்றைய நாளை நகர்த்திச் செல்வீர்கள். இன்று மாலை மனைவி குழந்தை பெற்றவர்களோடு சேர்ந்து வெளியிடங்களுக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளது. புதிய வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிட்டும்.