இன்றைய ராசிபலன் (21.09.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

840

இன்றைய ராசிபலன்….

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதுமையான சிந்தனை இருக்கும். அடுத்தவர்களால் யோசிக்கவே முடியாத புதுமையான சில விஷயங்களை இன்று நீங்கள் யோசித்து, அதை செயல்படுத்தி சாதித்தும் காட்டுவீர்கள். சிறப்பு வாய்ந்த அதிர்ஷ்டம் நிறைந்த இந்த நன்னாளில் உங்களுக்கு எல்லாம் வெற்றிகரமாக அமையும். குடும்பத்தில் சந்தோஷம் நிறைவாக இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.

ரிஷபம்:

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் மன நிம்மதியை தரக்கூடிய நாளாக அமையும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பு சந்தோஷத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்த தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்தது எதிர்பாராதது எல்லா விஷயங்களும் வெற்றியை கொடுக்கும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு பக்க துணையாக நிற்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தோல்விகள் ஏற்படும். மனதளவில் சோர்வு இருக்கும். நீங்கள் நினைத்த சில விஷயங்கள் நடக்காத காரணத்தால் சோகமாக இருப்பீர்கள். சின்ன கவலை தான். பெரிய அளவில் பிரச்சனை இல்லை. குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் நிதானம் தேவை. எதிலும் அவசரப்படக்கூடாது. முன்கோபம் இருக்கக் கூடாது. பிரச்சனைகளை சமாளிக்க குறுக்கு வழியில் செல்லக்கூடாது. மனைவியை அனுசரித்து செல்ல வேண்டும். வாக்குவாதத்தில் ஈடுபட்டால் பிரச்சனை பெருசாகிவிடும் ஜாக்கிரதை.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். நீங்கள் நினைத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். அடுத்தவர்கள் உங்களுக்கு தீமையை நினைத்து கெடுதலை செய்தாலும், இறுதியில் அது உங்களுக்கு நன்மையில் தான் போய் முடியும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக தான் இருக்கும். எதிரிகளிடம் போராடி வெற்றியை காண வேண்டி இருக்கும். எந்த விஷயத்திலும் சுலபமாக வெற்றி கிடைக்காது. கிடைக்கும் வாய்ப்புகளை சரிவர பயன்படுத்திக் கொள்ளுங்கள். எதையும் உதாசீனப்படுத்தாதீர்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிரமங்கள் இருக்கும். நீங்கள் பேசக்கூடிய வார்த்தை அடுத்தவர்களுக்கு தவறாக தெரியும். புதிய எதிரிகள் உண்டாக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களாகவே இருந்தாலும் அவர்களிடம் முழுசாக குடும்ப விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம். அடுத்தவர்களை நம்புவது போல நடிக்க வேண்டுமே தவிர, முழுசாக நம்பி எதையும் செய்யக்கூடாது.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் உழைப்பு தேவைப்படும். விடாமுயற்சி தான் விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். சொந்த தொழிலில் புதிய முதலீடுகளை செய்ய வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் எப்போதும் போல சுமுகமான நிலை காணப்படும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்க போகின்றது. பண கஷ்டத்தை சரி செய்ய எதிர்பாராத வகையில் கைக்கு பணம் வந்து சேரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் அடுத்தவர்களுக்கும் சாதகமாக இருக்கும். உங்களுக்கும் சாதகமாக இருக்கும். எதிராலிக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடந்து கொள்ளக்கூடிய மனப்பக்குவம் உங்களுக்கு இருக்கும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா வேலைகளையும் சுறுசுறுப்பாக செய்து முடித்துவிட்டு மேல் அதிகாரிகளிடம் பாராட்டை வாங்குவீர்கள். செய்யும் தொழிலில் எதிர்பாராத வெற்றி காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை. வண்டி ஓட்டும் போது ஹெல்மெட் அணியவும்.

மீனம்:

மீன ராசிக்காரர்கள் இன்று நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும் அதை நீங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். நல்லதே நினைத்து அதிக சந்தோஷப்படவும் கூடாது. கெட்டதை நினைத்து ரொம்பவும் வருத்தப்படவும் கூடாது. வாழ்க்கை உங்களை அழைத்துச் செல்லக்கூடிய பாதையில் அமைதியாக செல்லுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். பதராத காரியம் சிதறாது. இதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.