இன்றைய ராசிபலன் (24-07-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

839

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகலாம். வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்பட்டாலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்களின் உதவியால் இதுவரை இருந்த பிரச்சினை சற்று குறையும்.


மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். சிலருக்கு வீடு, வாகனம் வகையில் எதிர்பாராத பிரச்சனைகள் உண்டாகலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு இன்றைய நாளில் நீங்கள் எதிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. தொழில் ரீதியாக இதுவரை இருந்த பிரச்சினை படிப்படியாக குறையும். பேச்சில் நிதானம் தேவை.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உங்கள் ராசிக்கு இன்று நீங்கள் செய்யும் காரியங்களில் தாமதங்கள் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கி லாபம் உண்டாகும். வெளியிட பயணம் செல்ல நேரிடும். பயணத்தில் கவனம் தேவை. வேலையில் பணிச்சுமை குறையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவி கிட்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். எதிர்பார்த்த உதவி ஏமாற்றத்தை தரலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உத்தியோக ரீதியாக திடீர் பயணங்கள் செல்ல நேரிடும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். சுபகாரிய பேச்சவார்த்தைகளில் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பரத்தை குறைத்து சிக்கனம் மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சியில் அனுகூலப்பலன் உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. வெளி பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவும் உதவியும் கிட்டும்.