இன்றைய ராசிபலன் (31.10.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

458

இன்றைய ராசிபலன்…

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது புத்துணர்ச்சியாக இருக்கும். எல்லா வேலைகளையும் சுறுசுறுப்பாக செய்து முடித்து விடுவீர்கள். காலையில் எப்படி போனீங்களோ, அதே மாதிரி மாலையில் வீட்டுக்கு பிரெஷ் ஆக திரும்பி வருவீர்கள். சோர்வு கொஞ்சம் கூட இருக்காது. உங்களை பார்ப்பவர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு முகத்தில் மலர்ச்சி இருக்கும். இவ்வளவு சந்தோஷத்தை கொடுத்த கடவுளுக்கு நன்றியை தெரிவிப்போம்.

ரிஷபம்:


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அக்கறை தேவைப்படும். எந்த ஒரு விஷயத்திலும் முன்பின் யோசிக்காமல் முடிவு செய்யக்கூடாது. அது மட்டுமில்லாமல் அதிக பணத்தை செலவு செய்யக்கூடிய பழக்கத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று செய்யக்கூடிய வீண் செலவை உங்களால் திரும்பவும் ஈடுகட்ட முடியாத அளவுக்கு ரொம்பவும் அதிகமாக இருக்கும். ஆகவே பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக இருங்கள். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமமான நாளாக தான் இருக்கும். பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் மன அழுத்தம் ஏற்படும். உடல் சோர்வு ஏற்படும். இரவின் நிம்மதியான தூக்கம் இருக்காது. மனதை அமைதி படுத்த கொஞ்சம் நேரம் பிடித்த தெய்வத்தின் நாமத்தை சொல்லி தியானத்தில் அமரவும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் அசதி இருக்கும். இருந்தாலும் வேலையின் முக்கியத்துவத்தை கருதி சிரமப்பட்டாவது உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடித்து விடுவீர்கள். உங்களை நினைத்து நீங்களே பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய சில சம்பவங்கள் இன்று நடக்கும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். மாணவர்களுடைய அறிவுத்திறன் வெளிப்படும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். ஒட்டுமொத்த உறுப்பினர்களும் சந்தோஷமாக சேர்ந்து நேரத்தை செலவழிப்பீர்கள். வாகனங்களில் செல்லும்போது கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பல வகையில் இருந்து வருமானம் வரும். வாரா கடன் வசூலாகும். வேலை செய்யும் இடத்தில் ப்ரோமோஷன் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சொந்த தொழில் எதிர்பாராத ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மன மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலாளர்களுக்கு தேவையான ஊதியத்தை உயர்த்தி கொடுத்து சந்தோஷம் அடைவீர்கள்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் இன்று அடுத்தவர்களுடைய நம்பிக்கைக்கு எந்த ஒரு மோசடியும் இல்லாமல் நடந்து கொள்வீர்கள். உங்களை நம்பி ஒப்படைக்க கூடிய பணிகளை உயிரைக் கொடுத்தாவது முடிப்பீர்கள். அந்த அளவுக்கு சின்சியாரிட்டி உங்களிடம் இருக்கும். வேலை செய்யும் இடத்திலும் சொந்தத் தொழிலிலும் நல்ல பெயரை சம்பாதித்து கொள்வீர்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசி காரர்களே இன்று அவசியமான வேலைகளை மட்டும் பார்க்கவும். அனாவசியமான வேலைக்கு போகாதீங்க. அடுத்தவர்கள் பிரச்சனையில் தலையிடாதீங்க. இரண்டு பேருக்குள் சண்டை என்றால் அந்த இடத்தில் நீங்கள் நிற்பதே தவறு. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் வரக்கூடிய பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அழகான நாளாக இருக்கப் போகின்றது. நீங்களும் பார்ப்பதற்கு அழகாக இருப்பீர்கள். நீங்கள் செய்யும் வேலை, நீங்கள் எடுக்கும் முயற்சியிலும் அழகான வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் மனைவிகுள்ளிருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி அன்னியோன்யம் அதிகரிக்கும்.

மகரம்:

மகர ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். பர்ஸ் ஹேண்ட்பேக் இவைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். பிக்பாக்கெட் அடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. கூடுமானவரை இன்று பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். நீண்ட தூர பயணம் தேவையற்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்கள் சிரிக்க சிரிக்க இந்த நாளை கழிக்க போகிறீர்கள். எந்த பிரச்சனையும் இருக்காது. நகைச்சுவை உணர்வோடு இந்த நாளில் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மன அழுத்தம் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சின்ன சின்ன சிக்கல்கள் கூட சரியாகும். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்று சிக்கலான நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் கோபத்திற்கு ஆளாகுவீர்கள். சின்ன சின்ன சண்டை குடும்பத்தில் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வார்த்தைகளில் கவனம் தேவை. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். உறவுகள் ரொம்பவும் மென்மையானவை. அவை உடைந்து விட்டால் ஒட்ட வைப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.