இரண்டாவது மனைவியுடன் கூத்தடித்த சாண்டி.. தப்பு என் மேலதான் என கதறும் முதல் மனைவி!!

266

நடன இயக்குனர் சாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல தரப்பு ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது பாகம் பெரும்பாலும் இவருக்காகவே பார்க்கப்பட்டது என்று சொன்னால். மிகையாகாது.

சாண்டி கடந்த 2008 ஆம் ஆண்டு பிரபல நடிகை காஜல் பசுபதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நான்கு வருடங்களில் அவர் திருமணம் முடிவடைந்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

தற்போது சாண்டி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அவருடன் அவ்வப்போது புகைப்படம் வெளியிடுவது, டான்ஸ் ஆடுவது போன்றவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இதனை பார்த்த ரசிகர்களில் சிலர் சாண்டியை முதல் மனைவியை தவிக்க விட்டு இரண்டாவது மனைவியுடன் கூத்தடிகிறீர்களே இது நியாயமா என கேட்டுள்ளார்கள். அதேபோல் 7 கல்யாணம் பண்ணிக்கொண்டு எதுக்கு இவ்வளவு சீனு எனவும் திட்டி வருகின்றனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

அதற்கு சாண்டியின் முன்னாள் மனைவி காஜல் பசுபதி தனது ட்விட்டர் பக்கத்தில், தப்பு முழுவதும் தன்னுடையது தான் என்றும், நான்தான் சாண்டியை பிரிவதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சாண்டியை யாரும் திட்ட வேண்டாம் எனவும் ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு பலரிடமும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.