இரு மடங்காக அதிகரித்துள்ள பாவனை இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

814

இலங்கையின் தினசரி உப்பு உட்கொள்ளும் அளவு இரு மடங்காக அதிகரித்துள்ளதாக பொரள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ஐந்து கிராம் உப்பு மட்டுமே தேவைப்படுகிறது. இருப்பினும், இன்றைய இலங்கையர்கள் 13 கிராம் உப்பை உட்கொள்கிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆராய்ச்சியில் நாடு முழுவதிலுமிருந்து 850 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.. அவர்களின் சிறுநீர் மாதிரிகளில் உள்ள உப்பின் அளவைக் கொண்டு இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.


அதிக உப்பு நுகர்வு உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளது என்று பொரள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்துத் தலைவர் டாக்டர் ரேணுகா ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

இலங்கை பெண்கள் அரிசி சமைக்க அதிக உப்பை பயன்படுத்துகிறார்கள் என்றும், அரிசி உயர் தரம் வாய்ந்ததாக இருப்பதால் உப்பை பயன்படுத்த தேவையில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

கருவாட்டுக்கு அதிகப்படியான உப்பு பயன்படுத்துவதும் ஒரு பிரச்சினையாகும் என்றும் ஆராய்ச்சி தெரியவந்துள்ளது.