இளசு தொடங்கி பெரிசு வரை ஒருத்தரை விட்டு வைக்கல.. ஆபாச சாட்டிங்கால் சிக்கிய இளம்பெண்!!

537

கேரளாவில்..

கேரள மாநிலத்தில் அவ்வப்போது ஒட்டுமொத்த நாட்டையே திரும்பிபார்க்க வைக்கும் வகையில் குற்றச்செயல்கள் நடைபெறுகிறது. அண்மையில் பெண்கள் உடலை வெட்டி சமைத்து சாப்பிட்ட மந்திரவாதி தம்பதி, ஓடும் ரயிலில் பயணிகளுக்கு தீவைப்பு, பணப்பிரச்சினையில் பெண் துண்டு துண்டாக வெட்டிக்கொலை, வரதட்சணை கொடுமையில் இளம்பெண்களை கொன்ற கணவன்கள் என பல சம்பவங்களை கூறலாம்.

அந்த வரிசையில் தற்போது ஒரு சம்பவம் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே அஸ்வதி என்ற இளம்பெண், அஸ்வதி அச்சு, அனுஸ்ரீ அனு போன்ற பெயர்களைப் பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகள் மூலம் போலீசார் உட்பட ஆண்கள் பலரை ஏமாற்றி பணம் பறித்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

போலிக் கணக்கைப் பயன்படுத்தி, பூவார் பகுதியைச் சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும், தனக்கு 40,000 ரூபாய் கடன் உள்ளதாகவும் அதனை அடைத்தால் தான் திருமணம் செய்துகொள்ள முடியும் என்று முதியவரிடம் கூறியுள்ளார்.


அந்த வார்த்தைகளை நம்பி முதியவரும் பணத்தை வழங்கியுள்ளார்.முதலில் இளம்பெண் அஸ்வதி பதிவுக்கு முதியவர் லைக் போட்டுள்ளார். அதன்பின்னரே அஸ்வதி முதியவருக்கு குறுஞ்செய்தி தட்டிவிட்டுள்ளார். இதற்கு முதியவர் பதில் அளித்ததால், அவரை வலையில் வீழ்த்தி பணம் கறந்ததும் தெரியவந்தது.

பணத்தை வாங்கிக்கொண்டு இளம்பெண் அஸ்வதி தலைமறைவாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து, முதியவர் போலீசில் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் உதவியுடன் இளம்பெண் இருக்கும் இடத்தை கண்டறிந்து அவரை கைது செய்தனர்.

தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், ஏற்கனவே இந்த இளம்பெண் மீது திருவனந்தபுரம் பாங்கோடு காவல் நிலையத்தில் கொல்லம் பகுதி எஸ்ஐ புகார் அளித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது.

அதில், இதே பெண் முகநூல் மூலம் பழகி நட்பாகப் பேசி சுமார் 1 லட்சம் ரூபாய் வரை கறந்ததும் அம்பலமானதால் போலீசார் அதிர்ந்தனர். இதனால் அப்பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர், அவரது சமூக வலைதள கணக்குகளை ஆராய்ந்தனர்.

அப்போது போலீசார் உட்பட பல பிரபலங்களையும் இந்த பெண் ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்துள்ளது. இதற்காக சமூக வலைதளத்தில் இருந்து கிடைக்கும் பல இளம் பெண்களில் புகைப்படங்கள் கொண்டு போலி கணக்குகளை உருவாக்கியுள்ளார்.

இது தொடர்பாகவும், தனது புகைப்படத்தைப் பயன்படுத்தியதாகக் கொல்லத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மோசடி புகாரை இவர் மீது அளித்துள்ளார்.போலிக் கணக்குகள் மூலம் பல ஆண்களைத் தனது வலையில் சிக்க வைத்து அவர்களுடன் நட்பாகப் பேசுவது போல் தொடங்குவார்.

பின்னர் ஆபாசமாக சாட்டிங் செய்தும், கிளுகிளு புகைப்படங்களை அனுப்பியும் மயங்கியுள்ளார். தொடர்ந்து, அந்த சாட்டிங்களை வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இது வரையும் பணம் பறிகொடுத்தவர்கள் புகார் அளிக்காததால் சிக்காமலிருந்த பெண்ணை தற்போதே போலீசார் கைது செய்துள்ளனர்.