இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

344

திருவள்ளூரில்..

திருவள்ளூர் செவ்வாப்பேட்டை அடுத்த தொழுவூர் கிராமத்தை சேர்ந்த மதன் (42) – நாகராணி (33) தம்பதிக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. அவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் நாகராணி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நாகராணி தாயார் கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருமணமாகி இரண்டரை ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற உள்ளது.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

இதனிடையே, நாகராணி தற்கொலை செய்து கொள்ள அவரது கணவர் வீட்டாரே காரணம் என குற்றம்சாட்டி பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வரதட்சணை கேட்டும், குழந்தை இல்லை என்று கூறி கொடுமைப்படுத்தியும்,

பெற்றோர், உறவினர்களிடம் பேசக்கூடாது, யாரும் உன்னை பார்க்க இங்கு வரக்கூடாது என பெண்ணின் கணவர் குடும்பத்தினர் கூறியதாக நாகராணி பெற்றோர் குற்றம் சாட்டினர்.

எனவே பெண்ணின் கணவர் குடும்பம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.