இளம் வயது திருநங்கைகள் தான் குறி! ஆசை வார்த்தை கூறி சொகுசாக வாழ்ந்து வந்த இளைஞன்… அம்பலமான பகீர் மோசடி!!

814

தமிழகத்தில் திருநங்கைகளை குறிவைத்து ஏமாற்றி பண மோசடி செய்த நபர் குறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் திருநங்கை பிரியங்கா. இவருக்கும் புழல் பகுதியை சேர்ந்த முகமது உசேன் என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

திருநங்கை பிரியங்காவை திருமணம் செய்துகொண்டு வாழ்வதாக ஆசை வார்தைகள் கூறி அவருடன் பழகிவந்த முகமது உசேன் தான் கப்பலில் பணியாற்றுவதாகவும் கூறியுள்ளார்.

பிரியாங்காவின் டெபிட் கார்ட் கைபேசி என அனைத்தையும் முகமது பயன்படுத்திவந்துள்ளார். இதனை பயன்படுத்தி பிரியங்காவின் வங்கி கணக்கில் இருந்து அவ்வபோது 5ஆயிரம் 10ஆயிரம் என 2லட்சத்துக்கும் மேல் பணத்தை உசேன் திருடி சொகுசாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது தெரிந்து பிரியங்கா உசேனிடம் விசாரித்த போது பிரியங்காவுடனான தொடர்பை உசேன் துண்டித்துள்ளார். இந்நிலையில் முகமது உசேன் மீது நடவடிக்கை எடுக்ககோரி கடந்த மார்ச் மாதம் பிரியங்கா அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட பொலிசார் சிஎஸ்ஆர் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தூத்துக்குடி அருகே ஸ்ரீவைகுண்டம் பகுதியில் யுவஸ்ரீ என்ற திருநங்கை கடந்த வாரம் மண்ணெனய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை தொடர்பான புகைப்படங்கள் திருநங்கைகளின் வாட்ஸ் ஆப் குழுக்களில் பரவியுள்ளது அதை பார்த்தபோதுதான் சென்னை அமைந்தகரை சேர்ந்த திருநங்கை பிரியங்காவை ஏமாற்றிய முகமது உசேன் தூத்துக்குடியில் யுவஸ்ரீயுடன் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து முகமது உசேனையை அமைந்தகரை பொலிசார் மோசடி புகாரின் அடிப்படையில் தூத்துக்குடியில் கைது செய்து அழைத்து வந்துள்ளனர்.

இதோடு யுவஸ்ரீ கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, தற்போது முகமதிடம் பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here