இளைஞர் கல்லீரலில் 20 செ.மீற்றர் நீள கத்தி: மருத்துவர்களை மிரள வைத்த சம்பவம்!!

786

இந்தியாவில் இளைஞர் ஒருவரின் கல்லீரலில் சிக்கிய 20 செ.மீ நீளம் கொண்ட கத்தியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மூன்று மணி நேர போராட்டத்திற்குப்பின் நீக்கியுள்ளனர்.

இந்தியாவின் அரியானா மாநிலம் பல்வால் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் தினக்கூலி வேலை செய்து வருகிறார். கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள இவர், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன் கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்ததால், போதை மருந்து கிடைக்காமல் தடுமாறியுள்ளார்.

இந்த நிலையில், சமையலறை கத்தியை எடுத்து விழுங்கியுள்ளார். பின்னர் சாதாரணமாகவே இருந்துள்ளார்.

நாட்கள் செல்ல செல்ல சாப்பிடுவதற்கு கஷ்டப்பட்டுள்ளார். அதன்பின் உடல் மெலிய ஆரம்பித்துள்ளது. அடிவயிற்றில் வலி அதிகமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.


அதன்படி அந்த இளைஞர் எய்ம்ஸ் மருத்துவமனை சென்றுள்ளார். அங்கு மருத்துர்கள் அவரை பரிசோதித்தபோது அதிர்ச்சியடைந்தனர். கல்லீரலில் கத்தி ஒன்று சிக்கியிருப்பதைக் கண்டு மிரண்டுள்ளனர்.

ஆனால் கத்தி சுவாச குழாய், உணவுக் குழாய், இதயம் என எந்தவித பாகத்தையும் காயப்படுத்தாமல் நேராக கல்லீரல் சென்றதை கண்டு வியப்படைந்தனர். சிறு ஊசியை விழுங்கினால் கூட ஒன்றிரண்டு துளைகளை ஏற்படுத்தி விடும் என்று கூறும் மருத்துவர்கள், இதுகுறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்தனர்.

அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் ரத்தம் ஏற்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுமார் மூன்று மணி நேர அறுவை சிகிச்சைக்குப்பின் கத்தியை நீக்கியுள்ளனர். ஏழு நாட்கள் ஐசியூ-வில் இருந்து அந்த நபர் அபாயக்கட்டத்தில் இருந்து மீண்டுள்ளார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.