உங்கள் வீட்டில் ஏலக்காய் மற்றும் கற்பூரவள்ளி இருக்கா.!? அப்பிடீன்னா நீங்க தான் பணக்காரர்…!

783

உண்மைதான் இயற்கையிலேயே நமக்குக் கிடைக்கும் பொருட்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. அவற்றினைச் சரியாகப் பயன்படுத்தினால் அவற்றில் ஏற்படும் பக்கவிளைவுகளும் குறைவு. அவ்வாறு உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் சில இயற்கை மருத்துவங்களைத்தான் இன்று உங்களுக்கு நினைவுபடுத்தப்போகின்றேன்.

துளசி:இது உறக்கமின்மையைப் போக்குகின்றது. அஜீரணக் கோளாறால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. மாதவிலக்கு பிரச்சினைக்கு துளசியில் இருந்து எடுக்கும் தைலம் சிறந்த மருந்தாகப் பயன்படுகின்றது. இருமலையும் இத்தைலம் போக்குகின்றது. மன நெருக்கடியைப் போக்கவும் துளசியைப் பயன்படுத்தலாம்.

கற்பூரவள்ளி, இது நாடித்துடிப்பை சீர்செய்கின்றது. இரத்த அழுத்தத்தைச் சீர் செய்யவும். உடல் சோர்வை நீக்கவும் இதிலிருந்து தயாரிக்கும் எண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள்.

தலைச்சுற்றல் அதிகமாக வியர்த்தல், மாதவிலக்கு கோளாறுகளுக்கும் இது சிறந்த மருந்து ஆகும்.ஏலக்காய், பொதுவாக அனைவரும் ஏலக்காயை ஒரு சுவையூட்டியாகத்தான் உணவில் பயன்படுத்துகின்றனர்.

சுவையூட்டியாக மட்மல்லாமல் அஜீரணக் கோளாறால் ஏற்படும் நோய்களைப் போக்கவும் இது பயன்படுகின்றது. கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் வாந்தியைக் கட்டுபடத்தவும் ஏலக்காயானது பயன்படுகின்றது. சந்தனம்.சந்தனமானது உடலுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியைக் கொடுக்கின்றது.

உடலில் இருக்கும் தண்ணீர்த் தன்மையானது இதனால் பாதுகாக்கப்படுகின்றது. இதன் குளிர்ச்சியானது உடற்சூட்டிலிருந்து நம்மை பாதுகாக்கின்றது.நோயற்றே வாழ்வு தான் குறைவற்ற செல்வம் என்பார்கள்… மேல் குறிப்பிட்ட மருத்துவ பொருட்களை பயன்படுத்தி ஆரோக்கியமா வாழ்ந்தால். நிச்சயம் நீங்கள் தான் செல்வந்தர்..!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here