உடல் முழுவதும் காயங்களுடன் புதரில் 7 வயது சிறுமி: வன்கொடுமை செய்து கொலை!!

737

தமிழகத்தில் 7 வயது சிறுமி முட்புதர் நிறைந்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரை வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் காவல் எல்லையில் உள்ள அம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் நாகூரான் (தாய் மனநிலை பாதிக்கப்பட்டவர்).

இவர்களது 7 வயது மகள் நேற்று செவ்வாய் கிழமை முதல் காணவில்லை என்று ஏம்பல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை பதிவு செய்த பொலிசார் விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று புதன் கிழமை மாலை அதேபகுதியில் உள்ள கருவேல மரங்கள் அடர்ந்த கண்மாய் கரையில் கொடிகள் அடர்ந்த முட்புதரில் காணாமல் போன சிறுமி சடலமாக கிடப்பது கண்டறியப்பட்டது.

மேலும் சிறுமி உடலில் கால் பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் காயங்கள் உள்ளதும் காணப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளியை தேடும் பணி நடந்தது.

தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் சந்தேகத்தின் பேரில் அப்பகுதியில் கடை வைத்துள்ள ராஜேஷ் (29) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது சிறுமியைத் தானே வன்கொடுமை செய்து அடித்துக்கொன்றதாக பொலிசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, ராஜேஷை கைது செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here