கடந்த வருடம் உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் கேகாலை மாவட்டத்தில் 4வது மற்றும் 5வது இடங்களை பிடித்த இரட்டை சகோதரர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பல்கலைக்கழகத்திற்கு ஒன்றாக தெரிவாகிய இரட்டை சகோதரர்கள் தொடர்பில் முழு நாட்டினதும் அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.
ருசிரு தேஷான் மனதுங்க மற்றும் இசுரு ஹேஷான் மனதுங்க என்ற இந்த சகோதர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவர்கள் உயிரிழந்த செய்தி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
இசுரு ஹேஷான் மனதுங்க என்ற மாணவர் சுகயீனம் காரணமாக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று பிற்பகல் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.