கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுரையில் உலகம் முழுவதும் நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை கடந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோா நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது. இன்னமும் அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா உட்பட உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் தினமும் நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர்.
எனினும் இலங்கை கொரோனாவை கட்டுப்படுத்தி பொது மக்களின் வாழக்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
கொரோனா நோயை இலங்கை கட்டுப்படுத்திய முறை தொடர்பில் உலகம் முழுவதும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
இலங்கையில் கொரோனா தடுப்பு வேலைத்திட்டம் தொடர்பில் இதுவரையில் சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் வெளிநாட்டவர்கள் இந்த விடயம் தொடர்பில் பாராட்டுகளை தெரிவித்துள்ளதுடன், தீவிர மட்டத்தில் கலந்துரையாடலும் மேற்கொண்டுள்ளனர்.
அடுத்த மாதம் முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை நாட்டுக்குள் வர இலங்கை அரசாங்கம் அனுமதிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.