எங்கு சென்றாலும் ஆண் நபர்கள்… பாலில் தூக்க மாத்திரை கொடுத்து மனைவியை கொன்ற கணவன்!!

449

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புல்லூர் கிராமத்தில் வசிப்பவர் 32 வயதான ரமணி. விருத்தாசலத்தில் இயங்கி வரும் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்த ரமணி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் பிணமாக கிடந்தார். ரமணிக்கு பாண்டூர் பகுதியை சேர்ந்த அசோக் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த கொலை குறித்து போலீசார் விசாரணையை துவக்கிய போது, ​​அசோக் தலைமறைவானார். அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார், அசோக்கின் தந்தையிடம் விசாரணை நடத்தினர். முடிவில் போலீசார் அசோக்கை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ரமணிக்கு என்னை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே திருமணம் நடந்தது. ரமணி ஆட்டோவில் வரும் போது தான் எனக்கும், ரமணிக்கும் நட்பு ஏற்பட்டது. ரமணிக்கு திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்று தெரிந்த பிறகுதான் அவரை மணந்தேன்.

விருத்தாசலம் வங்கியில் பணியாற்றிய ரமணி, பெரம்பலூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதனால் எளிதாக வங்கிக்கு செல்ல பெரம்பலூர் கிருஷ்ணாபுரத்திலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தோம். ரமணியும் குழந்தைகளும் அந்த வீட்டில் இருந்தனர்.

உளுந்தூர்பேட்டையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த நான், வாரத்தில் ஒரு நாள் மட்டும் கிருஷ்ணாபுரம் சென்று ரமணியையும் குழந்தைகளையும் பார்ப்பது வழக்கம். அப்போதுதான் ரமணி வேறு சில ஆண்களுடன் பழகுவது தெரிந்தது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் ஒரு இடம் வாங்கியிருந்தோம்.

அந்த இடத்துக்கான பட்டா வாங்க அடிக்கடி குறிஞ்சிப்பாடி தாலுக்கா ஆபீசுக்கு போவது வழக்கம். அப்போது அங்குள்ள துணை தாசில்தார் ஒருவருடன் ரமணிக்கு நெருக்கம் ஏற்பட்டது. அந்த நெருக்கத்தை குறித்து ரமணியிடம் கேட்டேன்.


சும்மா பேசுனாரு.. இருந்தாலும் 2 பேரும் நெருக்கம்னு நானே தெரிஞ்சுகிட்டேன்.. இதற்கு நடுவே ரமணியை சின்ன ஆக்சிடென்ட்ல இருந்து மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிட்டாரு போலீஸ் உதவி எஸ்.ஐ.. அந்த நிமிஷம் முதல். அவர் அந்த எஸ்ஐயிடம் நெருங்கி பழக ஆரம்பித்தார். இவர்களை தவிர போலீஸ் அதிகாரி ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்தவர்.. எங்கு சென்றாலும் ஆண்களுடன் நட்பு வைத்து வந்தார்.

கடந்த 19ம் தேதி வீட்டுக்கு போயிருந்தேன்.. அப்போதும் ரமணி யாரோ ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எங்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் மூண்டது.. கோபத்தில் ரமணியை அடித்துவிட்டு வெளியே வந்தேன்.. ஆனால் அதன் பிறகுதான் கள்ளத்தொடர்புக்கு இடையூறு செய்யும் கணவர்களை மனைவிகள் கொல்லும் செய்திகள் அனைத்தும் நினைவுக்கு வந்தது.

ஒரு வேளை ரமணி தன் காதலர்களுக்காக என்னை கொன்று விடுவாளோ? ரமணிக்கு முன்னால் ஓவர்டேக் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். பாலில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்தேன்.. சண்டை போட்டு வெளியே வந்ததால், ரமணியை சமாதானம் செய்து, பால் குடிக்க வைத்தேன்.. ரமணி தூங்கியதும், தலையணையை அவள் முகத்தில் அழுத்தி கொன்றேன்,” என, அசோக் கூறியுள்ளார்.