குஜராத்…
குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டம் சோர்வாட் கிராமத்தைச் சேர்ந்தவர் நிதின் பார்மர்(28). இவர், அவரது வீட்டில் மர்மமான முறையி தூக்கிட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர், நிதின் பார்மரின் தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வந்த போலீசார், அவரது வீட்டைச் சோதனையிட்ட போது, நிதின் பார்மர், தற்கொலைச் செய்துக் கொள்வதற்கு முன்பாக எழுதியிருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
அதில், தனது தற்கொலைக்கு மாமியாரும், காங்கிரஸ் எம்எல்ஏ விமல் சுதாசமாவும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. தற்கொலைச் செய்து கொண்ட நிதின், காங்கிரஸ் எம்எல்ஏ விமல் சுதாசமாவின் நெருங்கிய உறவினர் என்று கூறப்படுகிறது.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் எம்எல்ஏவான சுதாசமா உடனடியாக மறுத்துள்ளார். “இது தற்கொலை அல்ல. கொலை போலத் தெரிகிறது. யாரோ என் மீது அவதூறு கிளப்புவதற்காக தற்கொலை போல காட்ட முயற்சிக்கிறார்கள்.
தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிதின், கடந்த 2 ஆண்டுகளாக என்னிடம் பேசவே இல்லை. அவர் என் அத்தையின் மகன். அவர் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் நம்புகின்றனர். அரசியலில் என்னைக் களங்கப்படுத்த யாரோ செய்த சதி இது” என்றார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிதின் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரிய வரும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குஜராத் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.