உத்தரபிரதேசத்தில்..
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் முஜ்க்தா பகுதியை சேர்ந்தவர் செங்கல் சூலை உரிமையாளரான மெஹ்ராஜூதின் (45). இவரது மனைவி ஷாமா. இந்நிலையில்,
ஷாமாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த அகீப் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தை அறிந்த கணவர் மெஹ்ராஜூதின் மனைவி ஷாமாவை கண்டித்துள்ளார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை போட்டுதள்ள முடிவு செய்தார்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
அதன்படி நேற்று முன்தினம் மெஹ்ராஜூதின் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது தனது ஆண் நண்பருடன் சேர்ந்து அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர்.
பின்னர், இருவரும் அங்கிருந்து தப்பித்துள்ளனர். இந்தத சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஷாமா, அகீப் ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.