கோபிநாத் ரவி..
பிரபல நடிகரும் மொடலுமான கோபிநாத் ரவியின் மனைவி இறந்ததாக பரவிய தகவல் உண்மையில்லை என்றும், இது போன்று செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு மிஸ்டர் இந்தியா போட்டியில் பட்டம் வென்றவர் கோபிநாத் ரவி, பிரபுதேவா நடிப்பில் உருவான பகிரா படத்தில் நடித்திருந்தார். மற்றொரு படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, இவர் கடந்த ஆண்டு மருத்துவர் பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவர் இறந்துவிட்டதாக தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியானது. மலையாளத்தில் சின்னத்திரையில் நடித்து பிரபலமான நடிகையும், மருத்துவருமான பிரியா 35 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
இந்த செய்தியில் இவரின் புகைப்படத்தை இணைத்து தகவல்கள் பரவ, இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோபிநாத் கூறுகையில், என் மனைவி உயிரோடு தான் இருக்கிறாள்.. அது யாரோ மலையாள நடிகை இறந்துள்ளார்.
சோசியல் மீடியாவில் பிரியா என்று தேடியதும் டாக்டர் பிரியா என்று என் மனைவி புகைப்படம் வந்துள்ளது. அப்பொழுது இவர் கர்ப்பமாக இருக்கும்போது எடுத்த புகைப்படம், அதனை அந்த நடிகையுடன் கொலாஜ் செய்து போட்டுவிட்டனர். நான் அப்போ தான் வீட்டை விட்டு வெளியே சென்றேன். நிறைய பேர் எனக்கு போன் செய்து பேசினர், அப்போ தான் எனக்கே தெரிந்தது என தெரிவித்துள்ளார்.