ஒரே நாளில் கோடீஸ்வரரான மெக்கானிக்… லொட்டரியில் அடித்த ஜாக்பாட்!!

95

இந்திய மாநிலம் கர்நாடகாவில் மெக்கானிக் வேலை பார்த்து வந்த நபர் ஒருவர், ஒரே நாளில் லொட்டரி மூலம் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்தாபின். மெக்கானிக் வேலை பார்த்து வரும் இவர் லொட்டரி டிக்கெட் வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் கேரள மாநிலம் வயநாட்டில் அல்தாபின் லொட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய திருவோணம் பம்பர் லொட்டரியில் ரூ.25 கோடி பரிசு விழுந்துள்ளது.

இதுகுறித்து மகிழ்ச்சியுடன் பேசிய அல்தாபின், “நான் 15 ஆண்டுகளாக லொட்டரி வாங்கி வருகிறேன். சிறு சிறு பரிசுகள் விழுந்தாலும் இப்படி ஒரு அதிர்ஷ்டம் கிடைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.

அல்தாபினுக்கு ரூ.25 கோடி பரிசு விழுந்தாலும், வரி பிடித்தம் போக அவருக்கு ரூ.12.11 கோடி மட்டுமே கிடைக்கும் என்று கூறப்படுகிறது.