ஒரே நாளில் 13 பில்லியன் டொலர் சொத்து சேர்த்த பிரபல தொழிலபதிபர்! கொரோனாவால் அடித்த அதிர்ஷ்டம்!!

642

அமெரிக்காவை அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பெசோஸ் ஒரே நாளில் 13 பில்லியன் டொலர் சொத்து சேர்த்து சாதனை படைத்துள்ளார்.

கொரோனா நோய்த் தொற்று தாக்கத்தால் பொதுமக்கள் வெளியே வரமுடியாத சூழல் அதிகமாகியுள்ளது. இதனால், அமெரிக்காவில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகமாகியுள்ளது. இதன் காரணமாக, உலகம் முழுவதும் ஆன்லைன் ஷாப்பிங்கில் கோலோச்சிவரும் அமேசான் நிறுவனத்தின் சொத்துமதிப்பு திடீரென உயர்ந்தது.

அமேசான் நிறுவனரான ஜெப் பெசோஸின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 13 பில்லியன் டொலர் (இலங்கை மதிப்பில் 96,95,15,300 கோடி ரூபாய்) அளவுக்கு உயர்ந்துள்ளது.

56 வயதாகும் ஜெப் பெசோஸ்தான் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர். உலக அளவில் அதிகரிக்கும் ஆன்லைன் ஷாப்பிங் பழக்கத்தால், இந்த ஆண்டில் மட்டும் அமேசான் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 73 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் 74 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த ஜெப் பெசோஸின் சொத்து மதிப்பு தற்போது 189.3 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. அதோடு, ஜெப் பெசோஸின் முன்னாள் மனைவியான மேகனீஸின் சொத்துமதிப்பு 4.6 பில்லியன் டொலருக்கு உயர்ந்துள்ளது. இப்போது இவர் உலகின் 13 – வது பணக்காரராக உள்ளார்.

கொரோனா ஊரடங்கு உத்தரவால் அமெரிக்காவின் பொருளாதாரமே சரிந்துவரும் நிலையில், அமேசான் நிறுவனத்தின் சொத்து மதிப்போ ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here