கடற்கரையில் உயிரிழந்து கிடக்கும் மிகப்பெரிய உயிரினம் பார்வையிட படையெடுக்கும் மக்கள்!

651

இந்தியாவின் மேற்கு வங்கத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள மந்தர்மணியில் பாரிய திமிங்கலம் ஒன்று கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

திமிங்கலம் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மந்தர்மணி காவல் நிலையம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அந்த இடத்தை அடைந்து திமிங்கலம் இறந்ததன் காரணத்தை புரிந்து கொள்ள முயன்றனர்.

இருப்பினும், திமிங்கலத்தின் இறப்புக்கான காரணம் இன்னும் உறுதியாகவில்லை, மேலும் இது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

இதேவேளை திமிங்கிலம் இறந்து கிடக்கும் செய்தி பரவியதை அடுத்து பெருமளவு மக்கள் அதனை சென்று பார்வையிட்டு வருகின்றனர்.