கணவனுடன் விவாகரத்து ஆன நிலையில் மறுமணம் செய்ய நினைத்த இளம்பெண்! அவர் வீட்டில் சகோதரி கண்ட அதிர்ச்சி காட்சி!!

703

இந்தியாவில் விவாகரத்து ஆன இளம்பெண் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்தில் குற்றவாளியை பொலிசார் தேடி வருகின்றனர்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் Rida Masroor Chaudhary. திருமணமாகி விவாகரத்து ஆன இவர் வங்கி மேலாளராக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு தனது சகோதரி Tarannum உடன் வீடியோ அழைப்பில் Rida பேசி கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த Ridaவின் அழைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது. பின்னர் சகோதரி மற்றும் குடும்பத்தார் Rida வீட்டுக்கு வந்த போது அவர் சடலமாக கிடந்தார்.

சம்பவம் தொடர்பாக தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து சடலத்தை கைப்பற்றினார்கள், அப்போது Rida உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பான விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Rida-வுக்கு ஹபிப் என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டுள்ளது, தனக்கு திருமணம் ஆகவில்லை என ஹிபிப் கூறிய நிலையில் அவரை மணக்க Rida விரும்பினார். இந்த சூழலில் ஹபிப்புக்கு ஏற்கனவே திருமணமான விடயம் தெரியவந்தது Rida-வை அதிர்ச்சியடைய வைத்தது, இதனால் அவருடனான தொடர்பை துண்டிக்க முயன்றார்.

ஆனால் ஹபிப் இதற்கு ஒப்பு கொள்ளாத நிலையில் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் Rida கொலை செய்யப்பட்டுள்ளார்,

இதை தொடர்ந்து அவரை கொலை செய்த ஹபிப்பை பொலிசார் தேடி வருகின்றனர். அவர் சிக்கிய பின்னர் இந்த சம்பவத்தில் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here