கணவனை தோளில் சுமக்க வைத்து குச்சியால் அடித்து நடக்க வைத்த கிராம மக்கள்! கமெராவில் சிக்கிய பரிதாப காட்சி!!

312

இந்தியாவில், முறை தவறி நடந்து கொண்டதாக, பெண் ஒருவரை தனது கணவரை தூக்கி நடக்க வைத்து, குச்சியால் அடித்து துன்புறுத்தியுள்ள வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில் பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் குஜராத்தில் கூலி வேலை செய்து வந்துள்ளனர்.

இந்த தம்பதி கடந்த ஞாயிற்றுக் கிழமை வேலையை முடித்துவிட்டு, சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது கணவன், தனது மனைவி வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர் ஒருவரிடம் நட்பில் இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, அந்த பெண்ணுக்கு கிராம மக்கள் தண்டனை வழங்க முடிவு செய்தனர். அதன் படி கணவனை தூக்கி நடக்க வைத்து, அவரை குச்சியால் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

அது தொடர்பான வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதன் படி,

பெண் தனது கணவனை தூக்கிச் செல்கிறார். சிறிது தூரம் சென்றது கணவரின் எடை தாங்காமல் நிலைத்தடுமாறும் அந்த பெண்ணை கிராம மக்கள் குச்சி மற்றும் இதர பொருட்களால் தாக்குகின்றனர்.

ஆனால் அந்த பெண்ணை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை, மாறாக அந்த பெண் வேதனைப்படும் காட்சிகளை செல்போனில் படம் பிடித்துக்கொண்டிருந்துள்ளனர்.

இந்த விவகாரம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் உட்பட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்