கணவரை கொன்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மனைவி : அதிர்ச்சிக் காரணம்!!

469

கிருஷ்ணகிரி….

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு சந்தோஷ் (வயது19) என்ற மகனும், துர்கா (14) என்ற மகளும் உள்ளனர்.

சந்தோஷ் கூலி வேலைக்கு சென்று வருகிறார். தீபிகா படித்து வருகிறார். இதனிடையே, கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சந்தோஷ் வேலைக்காக வெளியே சென்று விட்டார். அப்போது கணவன்-மனைவி இருவ ருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஜெயந்தி மனஉளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, மகன், மகள் தூங்க சென்று விட்டனர். அதன் பின்னர் கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த ஜெயந்தி கயிற்றை எடுத்து ரங்கசாமியின் கழுத்தில் போட்டு இறுக்கினார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

இதில் மூச்சுத்திணறி உயிரிழந்தார். பின்னர், அவரது உடலை அறையில் வைத்து அதன் மீது துணிகளை போட்டு ஜெயந்தி மூடி மறைத்து வைத்தார். நேற்று காலை எழுந்த மகள் தீபா, அப்பா எங்கே? என கேட்டுள்ளார். அதற்கு அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, அருகேயுள்ள பாட்டி சுசீலாவின் வீட்டுக்கு சென்று தெரிவித்துள்ளார்.

உடனே ரங்கசாமியின் வீட்டுக்கு வந்த சுசீலா, பேத்தியுடன் சேர்ந்து மகனை தேடியுள்ளார். அப்போது அறையில், ரங்கசாமி சடலம் துணிகளை கொண்டு மூடப்பட்டு கிடந்ததை கண்டு அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.

அவர்களை பார்த்ததும் ஜெயந்தி அப்பகுதியில் இருந்த 45 அடி ஆழ கிணற்றில் குதித்தார். அக்கம்பக்கத்தினர், அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் நீரில் மூழ்கி ஜெயந்தி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து துர்கா காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரங்கசாமி, அவரது மனைவி ஜெயந்தி ஆகிய 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்–பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது.