கணவரை பிரிந்து வாழும் பெண்ணுக்கு தம்பதி செய்து வந்த மோசமான செயல் : அம்பலமான உண்மை!!

724

மதுரை..

மதுரை ஆத்திகுளம் பகுதியை சேர்ந்த பாண்டிசெல்வி என்பவர், கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். கடந்த 2021ல் இவர் கரிமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆலையில் வேலை பார்த்ததால் அப்பகுதியிலேயே வீடு எடுத்து தங்கியிருந்தார். அப்போது அவரது வீட்டின் அருகே வசித்த கண்ணன் என்பவருக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கண்ணன் மீது கொலை, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் பாண்டிச்செல்வியிடம் அடிக்கடி பணம் வாங்கிக்கொண்டு அவருக்கு பாலியல் தொந்தரவும் அளித்துள்ளார். இதனால் ஒரு மாதத்திற்கு முன்னர் அவர் வீட்டை காலி செய்து கொண்டு ஆத்திகுளத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்.

கடந்த மே 2 அன்று வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பாண்டிச்செல்வியை, கண்ணன் அவரது மனைவி பிரேமா மற்றும் நண்பர்கள் பாலா, அருள்மணி, காதர், சங்கையா ஆகியோர் ஆட்டோவில் கடத்திச்சென்றனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

ஒரு வீட்டிற்குள் அடைத்து வைத்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து அவரிடமிருந்து ரூ.6,500 ரொக்கம், மொபைல், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை பறித்துக்கொண்டு அனுப்பியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து பாண்டிசெல்வி அளித்த புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து கண்ணன் மற்றும் பிரேமாவை கைது செய்து, நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.