கண்ணீர் விட்டுக் கதறும் சதா.. எல்லாத்துக்கும் காரணம் அவங்க தான்!!

135

சதா..

நடிகை சதா Torch Light என்னும் படம் மூலமாக Re-entry தந்தார். ஆனால் படம் ஓடவில்லை. மேலும், கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க தயார் என்பதற்கு பச்சைக்கொடி காட்டும் விதமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.

அதற்காக, உடல் எடையை குறைத்து, அழகுகளை காட்டி Video ஒன்றை வெளியிட்டு வருகிறார். இந்த வயசிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் சதா உள்ளார் என, அவரை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

போயா போ… போ… என்று ஜெயம், படத்தில் ஜெயம் ரவியுடன் அறிமுகமான சதா 2005இல் பிரபலமானார். இவர் அந்நியன் படத்தில் சியான் விக்ராமோடு நடித்திருந்தார். ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ வி.ரவிச்சந்திரன் மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

அந்த படத்தை தொடர்ந்து வர்ணஜாலம், எதிரி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, புலி வேசம், எலி உட்பட பல படங்களில் நடித்தார். இவருக்கு அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் எதுவும் அமையவில்லை. இப்போது வீடியோக்கள் வெளியிட்டு Comeback- ககாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

இதனிடையே, சதா தற்போது லைவ் வீடியோவில் கண்ணீர் விட்டு இருக்கும் சம்பவம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, Earthlings Cafe என்ற பெயரில் அவர் மும்பையில் ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறார். பல வருடங்களாக கடினமாக உழைத்து அந்த cafe-ஐ அவர் பெரிய அளவில் வளர்த்து இருக்கும் நிலையில், திடீரென அந்த இடத்தின் உரிமையாளர் காலி செய்யும்படி கூறிவிட்டதாக தெரிகிறது.

அதனால் இனி Earthlings Cafe நடத்தமுடியாது என சதா கண்ணீர் விட்டிருக்கிறார். மூடுவதை விட வேறு இடத்திற்கு மாற்ற முயற்சி செய்யுங்கள் என ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sadaa (@sadaa17)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here