கண் தானம் செய்த பெற்றோர்…. நண்பருடன் வந்த புதுமாப்பிள்ளைக்கும் நேர்ந்த சோகம்!!

1367

காஞ்சிபுரம்….

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை முருகாத்தம்மன் பேட்டையில் வசித்து வரும் சங்கர் என்பவரின் மகன் மணிகண்டன் (21). இவரின் நண்பர், திருவள்ளுவரைச் சேர்ந்த கார்த்திக் (26).

இவர்கள் இருவரும், பனையூர் அருகே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார்கள். அங்கு, வேலையை முடித்துவிட்டு ஒரே வாகனத்தின் ஒன்றாக வீடு திரும்புவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில், கார்த்திக் மற்றும் மணிகண்டனும் நேற்று இருச்சக்கர வாகனத்தில் படைப்பை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

அப்போது, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பனையூர் அருகே சென்று கொண்டிருந்த போது இவர்களுடைய இருசக்கர வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த லொறியின் மீது மோதியது. அப்போது, இவர்கள் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை உறுதி செய்த பின்பு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், விபத்தில் உயிரிழந்த கார்த்திக்குக்கு கடந்த 3 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

மேலும், விபத்தில் உயிரிழந்த மணிகண்டனின் பெற்றோர் கடுமையான சோகத்திலும், அவரது கண்களை தானம் செய்துள்ளனர்.