கந்தனுக்கு அரோகரா- ரஜினிகாந்தின் காட்டமான டுவிட்!!

630

கந்தசஷ்டி கவசம் தொடர்பாக சர்ச்சையான கருத்துகளை பதிவிட்ட கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

குறித்த யூ-டியூப் சேனல் மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் சென்னைக் காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

அத்துடன கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனல் நிர்வாகிகளில் ஒருவரான வேளச்சேரியைச் சோ்ந்த செந்தில்வாசன் என்பவரை கடந்த 15-ஆம் திகதி கைது செய்தனா், அந்த வீடியோவில் பேசிய சுரேந்திரன் புதுச்சேரியில் 16-ஆம் திகதி சரணடைந்தார். மேலும் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த சேனல் வீடியோக்கள் எல்லாம் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பலகோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி, கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச்செயலை வாழ்க்கையில் மறக்கமுடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவாது மதத்துவேசமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும். ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே!.. கந்தனுக்கு அரோகரா! என டுவிட் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here