கனடாவில் உயர்கல்வி படித்து வந்த இந்திய இளைஞர் கடலில் மூழ்கி பரிதாப மரணம்!

287

கனடாவில் உயர்கல்வி படித்து வந்த இந்திய இளைஞர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் அவர் குடும்பத்தார் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜசந்தீப் சிங் (19). இவர் கனடாவின் ஒட்டாவாவின் தங்கியிருந்த நிலையில் அங்கிருந்த கடலுக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார்.

பின்னர் துரதிஷ்டவசமாக கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார் ஜசந்தீப் சிங்.

இது குறித்து அவரின் தம்பி நவ்ஜோத் சிங் கூறுகையில், எங்கள் தந்தை பல்விந்தர் சிங் துபாயில் கடந்த 6 ஆண்டுகளாக பணிபுரிகிறார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

அவர் ரூ 20 லட்சம் கடன் பெற்று என் சகோதரர் ஜசந்தீப்பை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் கனடாவுக்கு கல்வி பயில அனுப்பி வைத்தார்.

உயிரிழந்த ஜசந்தீபின் நண்பர்கள் சமூகவலைதளம் மூலம் அவர் சடலத்தை இந்தியா அனுப்புவதற்கு பணம் வசூல் செய்துள்ளனர்.

ஜசந்திப்பின் சடலத்தை பெறுவதற்காக காத்திருக்கிறோம், இந்த விடயத்தில் அரசியல் தலைவர்கள் எங்களுக்கு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.