கனடாவில் நள்ளிரவில் சாலையில் சென்ற 16 வயது சிறுமி கார் மோதி பலி!

822

கனடாவில் நள்ளிரவில் சாலையில் சென்ற போது 16 வயது சிறுமி கார் மோதி கொல்லப்பட்ட வழக்கில் கார் ஓட்டுனரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Brampton நகரில் தான் இந்த சம்பவம் கடந்த ஜனவரி மாதம் நடந்தது.

நள்ளிரவு 12.20 மணிக்கு Dianna Manan (16) என்ற சிறுமி Gore Road and Queen Street அருகில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வேகமாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

அந்த சமயத்தில் அவ்வழியாக வாகனத்தில் சென்ற நபர் Dianna தலையில் பலத்த காயத்துடன் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் Dianna மருத்துவமனைக்கு தூக்கில் செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும் Dianna ரொரன்ரோவை சேர்ந்தவர் என தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஆதிநாத் சங்கர் (21) என்பவரை கைது செய்துள்ளனர்.

அவர் மீது மரணத்தை ஏற்படுத்திவிட்டு, சம்பவ இடத்தில் நிற்காமல் சென்றதாக வழக்குப்பதியப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here