கனடா ஒன்ராறியோ Pickering பகுதியில் பிரபல தமிழ் தொழிலதிபர் ஒருவர் மீது அவரது வீட்டில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை ஐந்து மணிக்கு இடம்பெற்றுள்ளதாகவும், அவரது வீட்டுக்கு வந்த சிலர் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், படுகாயமடைந்துள்ள அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
இந்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் 4 ஆண் சந்தேக நபர்களையும் ஒரு வெள்ளை நிற வாகனத்தையும் காவல்துறையினர் அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்த ஒளித் தொகுப்பொன்றை Durham பிராந்திய காவல்துறையினர் வெளியிட்டனர்.