கனமழையால் சாலையில் புதைந்த வீடுகள்..! கமெராவில் சிக்கிய திகிலூட்டும் காட்சி..!!

746

இந்திய தலைநகர் டெல்லியில் இன்று பெய்த கனமழையால் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

பலத்த மழையைத் தொடர்ந்து ஐ.டி.ஓ அருகே அண்ணா நகரின் சேரி பகுதியில் ஆறு போல் மழை நீர் ஓடியதால் சாலையில் ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் இரண்டு வீடுகள் சரிந்து புதைந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

டெல்லி-என்.சி.ஆர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கியது.

பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் நீரில் மூழ்கியிருந்த மின்டோ பாலத்தின் கீழ் ஒருவர் இறந்து கிடந்தார்.