கல்லூரி மாணவி சரமாரியாக குத்திக்கொலை.. வாலிபரை பிடிக்க கேரளா விரைந்தது தனிப்படை!!

844

பொள்ளாச்சியில்..

பொள்ளாச்சி கௌரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரவில் திடீரென்று இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்குடியிருப்பு வாசிகள் சத்தம் வந்த திசை நோக்கி ஓடி இருக்கிறார்கள்.

அப்போது குடியிருப்பில் இருந்த ஒரு வீட்டில் கல்லூரி மாணவி உடல் முழுவதும் கத்தி குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்து இருக்கிறார்.

அவர் உயிரிழந்தது தெரிய வந்ததும் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்கள். மகாலிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

பின்னர் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்த இளம்பெண் சடலம் கிடந்த வீடு சுஜய் வீடு என்பதும், சுஜய் என்கிற 30 வயது வாலிபரின் வீடு என்பதும், திருமணம் ஆன அவருக்கு ரேஷ்மா என்ற மனைவி இருப்பது தெரிய தெரிய வந்திருக்கிறது.

கோவை மாவட்டத்தில் இடையர்பாளையத்தைச் சேர்ந்த சுஜய், ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் வேலை செய்து வந்திருக்கிறார். அவரின் மனைவி ரேஷ்மா நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் பிரசவத்திற்காக கேரளாவில் உள்ள அவரது அம்மாவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.

இந்த நிலையில் சுஜய் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் குறித்து மேலும் போலீசார் விசாரித்த போது, அவர் சுப்புலட்சுமி என்பதும், 20 வயதான அந்த இளம் பெண் கோவை மாவட்டத்தில் இடையர்பாளையத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி என்பதும் தெரிய வந்திருக்கிறது. நேற்று இரவு தான் சுப்புலட்சுமியை, சுஜய் அவரின் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்.

சுப்புலட்சுமி உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியிருக்கிறார் சுஜய். இந்த சம்பவத்தில் சுப்புலட்சுமி எதற்காக சுஜய் வீட்டிற்கு வந்தார்? எதற்காக கத்தியால் குத்தி சுஜய் அவரை கொலை செய்தார் என்பதெல்லாம் சுஜய் கைது செய்யப்பட்டால் தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் பாலக்காடு விரைந்துள்ளனர் தனிப்படை போலீச போலீசார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here