திருப்பத்தூர்…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தேங்காய்பட்டறை பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகர் . இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு அனிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு 1 பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள். சந்திரசேகர் பெங்களூரில் கட்டிட தொழில் செய்து வந்துள்ளார்.
அப்போது அவருக்கு பூஜா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. பூஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவன் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சந்திரசேகர், பூஜாவுடன் வாணியம்பாடிக்கு சென்றுள்ளார். அப்போது தேங்காய்பட்டறை பகுதியில் உள்ள உறவினர் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான தேங்காய் தோப்பில் பூஜாவுடன் தனி ஓலைக் குடிசை வீட்டில் தங்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
அதே நேரத்தில் பூஜா காணாமல் போனதாக அவருடைய கணவர் பெங்களூரில் உள்ள ஒயிட் ஃபீல்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பூஜாவை அவருடைய குடும்பத்தினர் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் பூஜா வாணியம்பாடியில் இருப்பதை அறிந்தனர்.
பின்னர் சந்திரசேகர் பூஜா மற்றும் அவர் குடும்பத்தினர் இடையே அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் பூஜாவுக்கு அறிவுரையும் வழங்கி அவரை அழைத்துள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பூஜாவை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.
பின்னர் இதனை சற்றும் எதிர்பாராத சந்திரசேகர் திடீரென ஓடிச் சென்று அருகில் உள்ள கிணற்றில் குதித்துவிட்டார். பூஜா அங்கிருந்த மற்றொரு கிணற்றில் குதித்துள்ளார். இதனை தொடர்ந்து இரு குடும்பத்தினரும் கிணற்றில் குதித்து காப்பாற்ற முயற்சித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி இருவரையும் சடலமாக மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றானர்.