கவர்ச்சிக்கு கேட் போடும் பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

77

பிரியங்கா மோகன்….

லட்சணமான முக ஜாடையுன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகக்குறுகிய நாட்களிலேயே பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மூலம் தமிழ் கோலிவுட்டில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

ஆனால், அந்த படம் பெரிய அளவில் ஓடவில்லை. இதனால் பிரியங்கா மோகன் அடையாளம் இல்லாமல் இருந்தார். அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது. தமிழில் டாக்டர் படம் மூலம் நுழைந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

அப்படத்தை தொடர்ந்து டான், எதற்கும் துணிந்தவன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார். தற்போது இவர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் வருகிற 12-ம் தேதி வெளியாகவுள்ளது. அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய பிரியங்கா மோகன்,


என்னால் ஓரளவிற்கு மேல் என்னுடைய உடம்பை காண்பித்து நடிக்க முடியாது. அந்த விஷயத்தில் நான் எல்லையை தாண்ட மாட்டேன். எனக்கு சவுகரியமாக இருக்கும் பட்டசத்தில் நான் எல்லைமீறி கிளாமர் காட்டவே மாட்டேன்.

நான் ஏற்று நடிக்கும் ரோலில் இருக்கும் கிளாமர் யாரும் முகம் சுழிக்க முடியாத அளவு இருக்க வேண்டும் என்று நினைப்பேன் என கூறினார் பிரியங்கா மோகன். சிலர் நாட்களுக்கு முன்னர் பிரியங்கா மோகனின் மோசமான படுக்கையறை காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்று வெளியாகி எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.