பாபிலோனாவின் சகோதரர்..
தமிழ் திரையுகில், கவர்ச்சி வேடங்களில் நடித்து பிரபலமானவர் பாபிலோனா. குறிப்பாக தமிழில் இவர் நடித்து வெளியான தை பொறந்தாச்சு, என்னம்மா கண்ணு, அசத்தல், என் புருஷன் குழந்தை மாதிரி, வட்டாரம், ஆகிய படங்கள் அதிகம் கவனிக்க பட்டது. தமிழ் மட்டும் இன்றி, மலையாளம், கன்னடம், போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
பட வாய்ப்புகள் குறைய துவங்கிய பின்னர், ஃபிட்னெஸ் ட்ரைனரை ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் முற்றிலும் திரையுலகில் இருந்து விலகிய இவர், கணவர் – குழந்தைகள் என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் இவரின் சகோதரர் விக்கி, மர்மமான முறையில் வீட்டில் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஒரு ரவுடி என கூறப்படுவதால்… இவரை யாரேனும் முன் விரோதம் காரணமாக கொலை செய்தார்களா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
கடந்த சில வருடங்களுக்கு முன்பு கூட, சென்னை வளசரவாக்கம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் விக்கி, குடி போதையில் பிரச்சனை செய்ததற்காக அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இது தவிர இவர் மீது பல வழக்குகள் உள்ளன. விக்கியின் தாயார் மாயாவும் நடிகை தான். அதே நேரம் பாபிலோனா இவரின் உடன்பிறந்த சகோதரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.